டி20 உலகக் கோப்பை தொடரில், வங்கதேச அணி சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மேற்கு இந்திய தீவுகளின் செயின்ட் வின்செட் நகரில் நடைபெற்ற போட்டியில் குரூப்-D பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற நேபாளம் பந்து வீசிய நிலையில், வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியனர். 19.3 ஓவர்களில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷாகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து விளையாடிய நேபாள வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், குஷால் மற்றும் தர்மேந்திர இணை 50 ரன்கள் சேர்த்து நம்பிக்கை தந்தது. இருவரையும் முஸ்தபிஸூர் ரகுமான் வெளியேற்றிய நிலையில், நேபாளத்தின் நம்பிக்கை பறிபோனது. இறுதியில் அந்த அணி 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் வங்கதேச அணி 21 ரன்களில் வெற்றி பெற்று சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறியது. மேலும், உலகக் கோப்பை டி20 வரலாற்றில் மிககுறைந்த ரன்களை Defend செய்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
