• Login
Thursday, February 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றி.. நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இத்தாலி அணி.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 12, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றி.. நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இத்தாலி அணி.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 12, 2026 6:08 PM IST

இங்கிலாந்து அணிக்கு எதிரான மேட்ச்சில் நேபாள அணி 180 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

News18
News18

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 17 ஆவது போட்டியாக குரூப் சி பிரிவில் இத்தாலி மற்றும் நேபாள அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இத்தாலி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, நேபாள அணியில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் ஆசிப் ஷேக் 20 ரன்களும், கேப்டன் ரோஹித் படேல் 23 ரன்களும், ஆரிப் ஷேக் 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நேபாள அணி 123 ரன்கள் எடுத்தது.

இத்தாலி தரப்பில் கிரிஷன் கலுகமாகே 3 விக்கெட்டுகளையும், பென் மனேட்டி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இத்தாலி அணியின் பேட்ஸ்மேன்கள் சகோதரர்களான ஜஸ்டின் மோஸ்கா, ஆண்டனி மோஸ்கா களம் இறங்கினர்.

மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும், வாய்ப்புள்ள பந்துகளை சிக்சரும் பவுண்டரியுமாக மாற்றியனர். ஜஸ்டின் 41 பந்துகளில் 3 சிக்சர் 5 பவுண்டரியுடன் 59 ரன்களும், ஆன்டனி மோஸ்கா 31 பந்துகளில் 6 சிக்சர் 3 பவுண்டரியுடன் 61 ரன்கள் சேர்க்க 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இத்தாலி 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மேட்ச்சில் நேபாள அணி 180 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் நேபாளம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இத்தாலி அணி பவுலிங் மற்றும் பேட்டிங் திறமையால் நேபாள அணியை அதிரடியாக வென்றுள்ளது.

Read More

Previous Post

“மரியாதையா தாலி கட்டு..” இளைஞரை கடத்தி கட்டாய திருமணம்.. விசாரணையில் திடுக்கிடும் பின்னணி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

தொழில்நுட்ப கோளாறு: அவசரமாக கடற்கரையில் தரையிறக்கிய விமானம்! – Sri Lanka Tamil News

Next Post
தொழில்நுட்ப கோளாறு: அவசரமாக கடற்கரையில் தரையிறக்கிய விமானம்! – Sri Lanka Tamil News

தொழில்நுட்ப கோளாறு: அவசரமாக கடற்கரையில் தரையிறக்கிய விமானம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin