உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. 20 அணிகள் மோதிய இந்த தொடரில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.
11 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா கைப்பற்றக்கூடிய ஐசிசி கோப்பை இதுவாகும். இதேபோன்று 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர், சுமார் 17 ஆண்டுகள் கழித்து இந்தியா டி20 உலக கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில், இந்த கோப்பையை வைத்து, மும்பை நரிமண் பாயிண்டில் இருந்து வான்கிடே மைதானம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்ட பேரணி நடத்தப்பட உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த பேரணிக்கு ரசிகர்கள் உற்சாகமாக காத்துள்ளார்கள்.
இதையும் படிக்க:
உலக சாதனை படைப்பாரா விராட் கோலி… அடுத்த இலக்கு என்ன?!
முன்னதாக வெஸ்ட் இண்டீசின் பார்படோசில் சூறாவளிக்காற்று வீசியதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் தனி விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கோப்பையுடன் ரோகித் சர்மா வெளியே வந்து, அந்த கோப்பையை ரசிகர்களுக்கு காட்டி மகிழ்ச்சியடைந்தார்.
#WATCH | Men’s Indian Cricket Team waves at supporters gathered at Delhi airport to welcome the winning team.
India defeated South Africa by 7 runs on June 29, in Barbados. pic.twitter.com/7aqRL2ycpA
— ANI (@ANI) July 4, 2024
இன்று காலை 11 மணிக்கு இந்திய அணியினர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)