டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் உச்சபட்ச கொண்டாட்டமான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நியூயார்க்கில் களைகட்ட காத்திருக்கிறது. உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது.
நியூயார்க் சிட்டி ரசிகர்களால் நிரம்பி வழிகிறது. அங்குள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் Houseful போர்டு வைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் திண்டாடுகின்றனர்.
நியூயார்க்கில் உள்ள Nassau County சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க டி-20 போட்டி நடைபெற உள்ளது. அமெரிக்க உள்ளூர் நேரப்படி, காலை 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இதையும் படிக்க:
உலகக்கோப்பை டி20 களத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள்… அதிகமுறை வென்றது யார்?
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ள. ஆறு போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் பாகிஸ்தானும் வெற்றியை ருசித்துள்ளன.
உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம், இந்தியா தோல்வி அடைந்ததில்லை என்ற வரலாறு 2021ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற போட்டியில் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் பிறகு 2022 மெல்பர்னில் நடைபெற்ற டி-20 போட்டியில் இந்தியா மீண்டும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. குறிப்பாக 2007 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்று தோனி கொடுத்த டபுள் ட்ரீட் எவராலும் மறக்க முடியாத போட்டியாகும்.
இந்திய அணி வீரர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நியூயார்க் சிட்டியில் பயிற்சி மேற்கொள்கின்றனர். இதே மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக போட்டியில் வெற்றி பெற்று இந்திய ரசிகர்களையும் மகிழ்வித்தனர்.
மறுபுறம், அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தால், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் எப்படியும் வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் களம் காண்கிறது பாகிஸ்தான்.
அயர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் காயத்துடன் ரிட்டயர்ட் ஹர்ட் ஆன ரோஹித், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களம் காண்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை ரோஹித் இல்லாத பட்சத்தில் ஜெய்ஸ்வால் களமிறங்க வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், முதல் போட்டியில் அசத்தியதால், சஞ்சு சாம்சனுக்கு பதில் இவரே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
சூர்யகுமார், சிவம் துபே, ஹர்த்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் பின் வரிசையில் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கின்றனர்.
Flat Boundary பிட்ச் என்பதால் பும்ரா, சிராஜ், அர்தீப் சிங் கூட்டணி பவர்பிளேயில் விக்கெட் வேட்டை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஃபார்மை இழந்து தவிக்கின்றனர், போதக் குறைக்கு அமெரிக்காவிடம் தோற்றதால் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களால் சூப்பர் 8 வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும் என்பதால், இப்போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
