Last Updated:
உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அவர் முழுமையாகக் குணமடைந்து அணிக்குத் திரும்புவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னணி வீரர் திலக் வர்மாவுக்கு வலது கை ஆட்காட்டி விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு லண்டன் செல்ல வேண்டும் என்பதால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. ஆனால், இந்த அறுவை சிகிச்சை மற்றும் குணமடைய எடுக்கும் காலம் காரணமாக, திலக் வர்மா இந்தத் தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
2026 பிப்ரவரியில் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. திலக் வர்மா தற்போது டி20 கிரிக்கெட்டில் அபாரமான ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் விளாசி உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த அவருக்கு, இந்த காயம் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அவர் முழுமையாகக் குணமடைந்து அணிக்குத் திரும்புவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


