Last Updated:
ஆப்கானிஸ்தான் தனது முதல் லீக் போட்டியில் பிப்ரவரி 8-ம் தேதி சென்னையில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சுழற்பந்து ஜாம்பவான் ரஷித் கான் செயல்படவுள்ளார்.
உலகக்கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 15 பேர் கொண்ட ஆப்கன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தலைமையிலான இந்த அணியில் சில முக்கிய வீரர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டரான குல்பதின் நைப், கடந்த அக்டோபரில் வங்கதேசத் தொடரில் இடம்பெறவில்லை. தற்போது உலகக்கோப்பைக்கான முக்கிய வீரராக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
தோள்பட்டை காயம் காரணமாக கடந்த செப்டம்பரில் நடந்த ஆசியக் கோப்பையைத் தவறவிட்ட நவீன், தற்போது முழு உடல் தகுதி பெற்று அணிக்குத் திரும்பியுள்ளார். இது ஆப்கானிஸ்தானின் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தும்.
காயத்திலிருந்து மீண்டுள்ள முஜீப் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இளம் வீரர் ஏ.எம். கசன்ஃபர் மாற்று வீரர்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் யுஏஇ ஆகிய அணிகளுடன் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பின்வருமாறு – ரஷீத் கான் (கேப்டன்), நூர் அஹ்மத், அப்துல்லா அஹ்மத்ஸாய், செடிகுல்லா அடல், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ரஹ்மானுல்லா குர்பாஸ், நவீன் உல் ஹக், முகமது இஷாக், ஷாஹிதுல்லா கமால், முகமது நபி, குல்பாடின் நைப், அஸ்மதுல்லாஹ் உமர்ஸாய், முஜீப்ராஹ் உமர்சாய்


