கொல்கத்தா: டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணி இத்தாலியை 73 ரன்கள் வித்டிதயாசத்தில் வீழ்த்தி,அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் மன்செய் 84 ரன்கள் குவித்து தனது அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 207/4 என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பை எட்டியது.
இப்போட்டியில் இத்தாலி அணியின் கேப்டன் வேய்ன் மேட்சன் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஸ்காட்லாந்து அணிக்கு மன்செய் 54 பந்துகளில் 84 ரன்கள் எடுத்ததுடன், பிராண்டன் மெக்முல்லன் மற்றும் மைக்கேல் லீஸ்க் ஆகியோரின் விரைவான ரன்கள் அணியின் ஸ்கோரை உயர்த்த முக்கிய பங்காற்றியது. இதனால் ஸ்காட்லாந்து அணி, 207 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டி20 உலககோப்பை வரலாற்றில் முதல் முறையாக 200 ரன்கள் என்ற இலக்கை ஸ்காட்லாந்து அணி கடந்தது.
டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான இத்தாலி அணிக்கு இது முதல் போட்டி ஆகும். இத்தாலியின் கேப்டன் வேய்ன் மேட்சன், “இந்த ஆட்டத்தை நாங்கள் அனுபவித்து விளையாடவும், பெரிய மேடையில் எங்களை வெளிப்படுத்தவும் விரும்புகிறோம்” நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.
உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் வாய்ப்பை இழந்த ஸ்காட்லாந்து அணிக்கு, வங்கதேசம் விலகியதால் அதிர்ஷ்டவசமாக இந்த உலகக் கோப்பையில் இடம் கிடைத்தது. அசோசியேட் அணியாக, ஸ்காட்லாந்து தனது திறமையை வெளிப்படுத்தி, இந்தப் போட்டியில் 206 ரன்களை குவித்து, பின்னர் அதை எளிதாகப் பாதுகாத்து வெற்றியை உறுதி செய்தது.
இலக்கை துரத்திய இத்தாலி அணி, தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும், பெஞ்சமின் மெனாண்டி 31 பந்துகளில் 52 ரன்கள் மற்றும் ஹாரி மெனாண்டி 25 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அசத்தினர். இந்த ஜோடி 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து, அசத்தியது. ஸ்காட்லாந்துடன் கடந்த ஆண்டு ஐரோப்பிய தகுதிச் சுற்றில் சந்தித்த தோல்விக்கு பழிவாங்க இத்தாலி முயன்றது.




