Last Updated:
DK Shivakumar | சிவக்குமார் எப்போது முதலமைச்சர் ஆவார் என்ற கேள்விக்கு கட்சி மேலிடம் முடிவு செய்யும் என சித்தராமையா பதிலளித்தார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸின் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காணும் முயற்சியாக, முதலமைச்சர் சித்தாராமையாவும் துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாரும் 2 ஆவது முறையாக ஒன்றாக காலை உணவருந்தினர்.
கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, முதலமைச்சர் பதவிக்குச் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதன்படி முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், மீதமுள்ள காலம் சிவக்குமாரும் ஆட்சி செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் கடந்த 20ம் தேதியுடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்றுவதில் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
கர்நாடகா முதலமைச்சர் பதவியை டிகே சிவக்குமாரிடம் வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்ட நிலையில், பிரச்னையை பேசி தீர்க்க காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தி வந்தது. அதன் ஒருபகுதியாக கடந்த 29 ஆம் தேதி சித்தராமையா வீட்டிற்கு சென்று டிகே சிவக்குமார் காலை உணவருந்தினார்.
இந்த நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள டிகே சிவக்குமார் வீட்டில் 2ஆவது சந்திப்பு நடைபெற்றது. தனது வீட்டிற்கு வந்த சித்தராமையாவை வாசலுக்கே சென்று டிகே சிவக்குமாரும் அவரது சகோதரர் டிகே சுரேசும் வரவேற்றனர். பின்னர், அவர்கள் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர்.
#WATCH | Bengaluru | Karnataka CM Siddaramaiah says, “There are no differences. DK Shivakumar and I are united. We are running the government. In the future also, we will run the government unitedly…” pic.twitter.com/uM4cjTNDL7
— ANI (@ANI) December 2, 2025
இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில், தங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்று கூறினர்.
December 02, 2025 2:52 PM IST


