பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான அமேசான் இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனை நிகழ்வுக்கான தேதிகளை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன்படி அமேசான் பிரைம் டே 2024 ஸ்பெஷல் விற்பனையானது ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது.
அமேசான் தனது பிரைம் மெம்பர்ஸ்களுக்காக இந்த Prime Day Sale-ஐ நடத்துகிறது. இந்த சிறப்பு விற்பனையின்போது பல பிரபலமான தயாரிப்புகள் மீது பெரும் சலுகைகள் மற்றும் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும். கன்ஸ்யூமர் டெக் முதல் வீட்டுப் பொருட்கள் வரை ஃபேஷன், ஆடை மற்றும் பல கேட்டகரி பொருட்களை வாங்கும் அமேசான் பிரைம் மெம்பர்ஸ்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகளை வழங்க உள்ள Amazon Prime Day Sale 2024 மொத்தம் 2 நாட்கள் லைவில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளின்போது இருந்ததை போலவே, அமேசான் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கிகளுடன் சேர்ந்து, அந்த வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் செய்யப்படும் பேமெண்ட்ஸ்களுக்கு சேமிப்புகளை வழங்குகிறது. மேலும் இந்த 2 நாள் ஸ்பெஷல் ஆன்லைன் விற்பனையின்போது அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு Echo டிவைஸ்கள் போன்ற அமேசான் தயாரிப்புகளும் விலை குறைவாக கிடைக்கும்.
அமேசானின் Prime Day Sale 2024 எப்போது?
தனது பிரபலமான அமேசான் பிரைம் டே சேலின் எட்டாவது எடிஷன் வரும் ஜூலை 20 சனிக்கிழமை அதிகாலை 12 மணிக்கு தொடங்கி ஜூலை 21 அன்று இரவு 11:59 மணிக்கு முடிவடையும் என்று அமேசான் அறிவித்துள்ளது. மேலும் இந்த 48 மணிநேர சிறப்பு விற்பனையின்போது பல புதிய தயாரிப்பு வெளியீடுகளும் இருக்கும் என்பதையும் அமேசான் உறுதிப்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க:
முதலீட்டு முடிவுகளை சுயமாக எடுக்கும் 72% பெண்கள்… ஆய்வில் புதிய தகவல்
இது குறித்து தகவல் தெரிவித்திருக்கும் அமேசான், நடைபெற உள்ள இந்த 48 மணி நேர விற்பனை நிகழ்வில், 450க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகளான Intel, Samsung, OnePlus, iQoo, Honor, Sony, Asus மற்றும் பல நிறுவனங்களின் புதிய தயாரிப்புகள் வெளியிடப்படும் என கூறியுள்ளது. அமேசான் பிரைம் டே 2024-ல் ஹோம், கிச்சன், ஃபேஷன் மற்றும் க்ரூமிங், நகைகள், ஹேண்ட்மேட் ப்ராடக்ட்ஸ் மற்றும் பல கேட்டகரியில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃபர்ஸ்:
Prime Day 2024-ன் போது ICICI பேங்க் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகள், SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளை பயன்படுத்தி பணம் செலுத்தும் பிரைம் உறுப்பினர்கள் 10% தள்ளுபடியை பெறலாம். அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு யூஸர்கள் ரூ.2,500 வரை வெல்கம் ரிவார்ட்ஸ்களையும், ரூ.300 வரை கேஷ்பேக் (பிரைம் மெம்பர்ஸ்களுக்கு மட்டும்) மற்றும் விற்பனையின்போது ரூ.2,200 வரை ரிவார்ட்ஸ்களையும் பெறலாம்.
இதையும் படிக்க:
ரூ.300-க்கும் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்… யாருக்கு எது பெஸ்ட்?
மேலும் Echo ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஃபயர் டிவி ஸ்டிக்குகளுக்கு 55% வரை தள்ளுபடி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விற்பனை சலுகைகள் தவிர, அமேசான் மில்லியன் கணக்கான தயாரிப்புகளில் அதே நாள் மற்றும் அடுத்த நாள் டெலிவரி செய்யப்படும் என்பதை உறுதி செய்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல அமேசான் பிரைம் டே சேல் 2024 என்பது பிரைம் உறுப்பினர்களுக்கான பிரத்யேகமாக விற்பனை நிகழ்வாகும். நீங்கள் அமேசானின் பிரைம் உறுப்பினராக இல்லாவிட்டால், விற்பனையின்போது பர்ச்சேஸ் செய்ய 30 நாள் ஃப்ரீ-ட்ரையலை தேர்வு செய்யலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)