Last Updated:
டிரம்ப் ஹெலிகாப்டர் பயணிகள் விமானத்திற்கு மிக அருகில் பறந்த சம்பவம்: அமெரிக்க அதிகாரிகள் விசாரணை. தகவல் தொடர்பு குளறுபடியால் பரபரப்பு.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணித்த ஹெலிகாப்டர், பயணிகள் விமானத்திற்கு மிக அருகில் பறந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதிபர் டிரம்ப், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘மெரைன் ஒன்’ ஹெலிகாப்டரில் மேரிலேண்ட்டில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் ராணுவ தளத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, வாஷிங்டன் வான் பரப்பில் பறந்துக்கொண்டிருந்த பயணிகள் விமானத்திற்கும், அதிபர் டிரம்ப் பயணித்த ‘ஹெலிகாப்டருக்கும் இடையே பாதுகாப்பான இடைவெளி குறுகியது.
இந்நிலையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை உடனான தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடியால், டிரம்ப் பயணித்த ஹெலிகாப்டர், பயணிகள் விமானத்திற்கு புள்ளி 8 மைல் இடைவெளியில் நெருங்கி வந்துள்ளது. வழக்கமான பாதுகாப்பு விதிகளின்படி, வானில் பறக்கும் இரு விமானங்களுக்கும் இடையே குறைந்தபட்சம் 1.5 மைல் கிடைமட்ட இடைவெளியும், 500 அடி செங்குத்து இடைவெளியும் இருக்க வேண்டும்.
ஆனால் டிரம்ப பயணித்த ஹெலிகாப்டர் விமானத்திற்கு மிக அருகே வந்ததால் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் , ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகமும் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
டிரம்ப் ஹெலிகாப்டரை நெருங்கிய பயணிகள் விமானம்.. அமெரிக்காவில் பரபரப்பு.. என்ன நடந்தது?


