Last Updated:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்-ருக்கு பிரமாண்ட விருந்து அளித்தார்… இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்களும் பங்கேற்றனர்.
3 நாள்கள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்கா சென்றுள்ளார். 11 ஆண்டுகளுக்குப் பின்னர், சீன அதிபர் ஒருவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன அதிபரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த அமெரிக்கா அவருக்காக மிக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. அதிபர் ஷி ஜின்பிங்-கை அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று முன்தினம் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். வழக்கமாக பிற நாட்டுத் தலைவர்களை அமெரிக்க அதிபர்கள் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்க மாட்டார்கள். ஆனால் இந்த protocal 60 ஆண்டுகளுக்கு பிறகு உடைக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய வரவேற்பை போலவே, ஷி ஜின்பிங்-கிற்கு அதிபர் டிரம்ப் அளித்த விருந்தும் மிக பிரமாண்டமாக அமைந்தது.. அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா ஆகியோர் வெள்ளை மாளிகை வாயிலில் காத்திருந்து சீன அதிபர் ஷி ஜின்பிங், மனைவி பெங் லியுவான் ஆகியோரை உள்ளே அழைத்துச் சென்றனர். விருந்து நிகழ்ச்சியில் இரு நாட்டு தலைவர்களும் ஒருவரையொருவர் பாராட்டி பேசினர்.
விருந்தின் தொடக்கத்தில் Schramsberg “Blanc De Noirs” என்னும் கலிபோர்னியா நாட்டு ஒயின் பரிமாறப்பட்டது. இந்த ஒயின் 1972-ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது வழங்கப்பட்ட அதே பிராண்ட். பின்னர், வைல்ட் காளான், ஃபிரெஷ் மூலிகைகள் மற்றும் மொறுமொறுப்பான பான்செட்டா சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மஞ்சள் பூசணிக்காய் சூப், எள்ளுப் பொடி தூவப்பட்ட கடல் பாஸ் மீன், வெள்ளை மாளிகைத் தோட்டத்தில் சேகரிக்கப்பட்ட இயற்கையான தேன் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரத்யேக ஐஸ்கிரீம் என ஏராளமான அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன.
இந்த சந்திப்பின் நினைவாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு அமெரிக்காவின் தேசியச் சின்னமான ‘கழுகு’ சிற்பத்தைப் பரிசளித்தார். தங்க முலாம் பூசப்பட்ட இந்த நேர்த்தியான சிற்பத்தை டிரம்ப் தம்பதியரே நேரடியாகத் தேர்ந்தெடுத்திருந்தினர். சீன அதிபர் தரப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பின் அடையாளமாக, ‘பிங் பிங்’ மற்றும் ‘பு சுவாங்க்’ ஆகிய இரண்டு பாண்டா கரடிகள் விரைவில் அட்லாண்டா விலங்கியல் பூங்காவிற்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையிலான கலாச்சார உறவை வலுப்படுத்தும் விதமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் அமெரிக்க மாணவர்களைச் சீனாவுக்கு அழைத்து வந்து கல்வி கற்கச் செய்யும் சிறப்புத் திட்டத்தையும் ஷி வெளியிட்டார். இந்த விருந்தில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் வகையில் பல முக்கிய இந்திய வம்சாவளி முகங்கள் இடம்பெற்றிருந்தனர்.
அதாவது, ஆல்பாபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெல்லா, மைக்ரான் டெக்னாலஜி நிறுவன தலைவர் சஞ்சய் மெஹ்ரோத்ரா, Nvidia CEO ஜென்சன் ஹுவாங்க், Apple CEO டிம் குக், Tesla நிறுவனர் எலான் மஸ்க், Meta நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்
உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பெருந்தகைகளும் கலந்துகொண்டனர்.


