அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றபோது பல நாடுகள் பதற்றம் அடைந்ததாகவும், ஆனால் இந்தியா பதற்றம் அடையவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜெய்சங்கர், கமலா ஹாரிஸை தோற்கடித்து அமெரிக்க அதிபராக மீண்டும் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட சிறிது நேரத்தில், டிரம்ப்க்கு வாழ்த்துக்கூறிய முதல் 3 உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என்று கூறினார்.
ஆனால் பல நாடுகள் டிரம்பின் வெற்றியைக் கண்டு பதற்றம் அடைந்ததாக ஜெய்சங்கர் கூறினார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவிக் காலத்தில், இருந்த அமெரிக்க அதிபர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தியதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
பராக் ஓபாமா, டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் என அடுத்தடுத்து வந்த அமெரிக்க அதிபர்களுடன் நட்புறவு நீடித்ததாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)