Last Updated:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் தென் கொரியா செல்லவுள்ள சூழலில், வட கொரியா ஏவுகணை சோதனை செய்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் முதல்முறையாக இந்த வார இறுதியில் ஆசியாவிற்கு வர திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, மலேசியாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர் ஜப்பான் செல்லும் டிரம்ப், தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், வட கொரியா கடந்த ஐந்து மாதங்களில் முதல் ஏவுகணையை சோதனை செய்திருப்பதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது. பியோங்யாங்கின் தெற்கே உள்ள ஒரு பகுதியிலிருந்து குறுகிய தூரம் பாயும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவை வடகிழக்கு நோக்கி சுமார் 350 கிலோமீட்டர் பறந்ததாகவும் தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.
வட கொரியாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கையை முறியடிக்க தென் கொரியா தயாராக இருப்பதாகவும் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஏவுகணை சோதனை தொடர்பாக வட கொரியா எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை.
October 22, 2025 10:14 PM IST


