டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பிதழ் பெற பிரதமர் மோடி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்கா அனுப்பியிருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிச.24-29 வரை அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஜெய்சங்கர், அந்நாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த பயணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமரிசித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை அமரிக்காவுக்கு அனுப்பி, தனக்கு, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழைப் பெற்று வருமாறும், இல்லாவிட்டால் உங்கள் வேலை பறிபோகும் என்று கூறியிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

