• Login
Saturday, October 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிரம்ப் கையில் ‘Gold’ இருந்தால் அவ்வளவு தான்.. மொத்தமும் அம்பேல்.. ரஷ்யா கற்றுக்கொடுத்த பாடம்! | Goldman Sachs Shocking Report: Central Banks Buy 79 Tonnes of Gold in August as Nations Fear Trump Sanctions

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிரம்ப் கையில் ‘Gold’ இருந்தால் அவ்வளவு தான்.. மொத்தமும் அம்பேல்.. ரஷ்யா கற்றுக்கொடுத்த பாடம்! | Goldman Sachs Shocking Report: Central Banks Buy 79 Tonnes of Gold in August as Nations Fear Trump Sanctions
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிரம்ப் கையில் ‘Gold’ இருந்தால் அவ்வளவு தான்.. மொத்தமும் அம்பேல்.. ரஷ்யா கற்றுக்கொடுத்த பாடம்!

உலகளாவிய முதலீட்டுக்கும், பொருளாதாரத்திற்கும் தங்கம் முக்கிய பென்ச்மார்க் ஆக இருந்தாலும் உலக நாடுகள் டாலரிலும், அமெரிக்கப் பத்திரத்தில் தான் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வந்தது.

ஆனால் கடந்த 4 வருடத்தில் டாலர் மதிப்பில் ஏற்பட்ட தடுமாற்றம், அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதிகரித்த கடன், டிரம்ப்-ன் நிலைப்பாடு என அனைத்தும் உலக நாடுகளின் மத்திய வங்கி பல அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியது.

டிரம்ப் கையில் 'Gold' இருந்தால் அவ்வளவு தான்.. மொத்தமும் அம்பேல்.. ரஷ்யா கற்றுக்கொடுத்த பாடம்!

இதுகுறித்து கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளரான லீனா தாமஸ் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்திருக்கும் வேளையிலும் 2022 அளவை காட்டிலும் அதிக தங்கத்தை வாங்கியுள்ளது.

இதேபோல் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளில், மற்ற நாடுகள் தங்கத்தை வைத்திருப்பதை அச்சுறுத்தலாகப் பார்த்து வருகின்றனர். இதனால் பல நாடுகள் தங்கத்தை இடம் மாற்றம் செய்து வருகிறது.

தங்கம் கொள்முதல்

2022க்கு முன்பு உலகளாவிய மத்திய வங்கிகள் சராசரியாக மாதம் 17 டன் தங்கத்தை வாங்கி வந்தது, ஆனால் தற்போது விலை அதிகமான சூழ்நிலையிலும் ஆகஸ்ட் 2026ல் 4.6 மடங்கு அதிகரித்து 79 டன் தங்கத்தை வாங்கியுள்ளது.

ஏன் 2022-ஐ இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றால், கொரோனா தொற்றின் தாக்கம் முடிந்த பின்பு ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக அமெரிக்காவுடன் சேர்ந்து ஜி7 நாடுகள் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவுக்கு சொந்தமான 300 பில்லியன் டாலர் தங்கத்தை அப்படியே முடக்கியது.

தங்கம் இடமாற்றம்

இப்படி அமெரிக்க டாலர், அமெரிக்க அரசு பத்திரத்தில் உலக நாடுகள் செய்யப்பட்ட முதலீட்டையும் முடக்கலாம் என்ற கணிப்பில் உலக நாடுகள் தங்கத்திற்கு மாறியது. இதுமட்டுமா உலக நாடுகள் அமெரிக்காவையும், ஜி7 நாடுகளையும் நம்பாமல் தங்களுக்குச் சொந்தமான தங்கத்தைத் தாய் நாட்டிற்குக் கொண்டு வர முடிவு செய்தது.

உதாரணமாக ஆகஸ்ட் மாதம் உலகளாவிய மத்திய வங்கிகள் வாங்கிய 79 டன் தங்கத்தில் சீனா மட்டுமே 25 டன் தங்கத்தை வாங்கியுள்ளதாகக் கணிக்கப்படுகிறது. பொதுவாகச் சீனா லண்டன் எக்ஸ்சேஞ்சில் தான் தங்கத்தை வாங்கி சேமிக்கும், ஆனால் தற்போது சீனா ரீடைல் சந்தையில் அதிகளவில் வாங்கி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அளவை காட்டிலும் அதிகமாக வாங்கி குவிக்கிறது என கோல்டுமேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.

இதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அமெரிக்காவின் New York Federal Reserve-ல் இருந்த 40 டன் தங்க இருப்பு குறைந்துள்ளது கவனிக்கக் கூடிய விஷயமாக மாறி வருகிறது. இந்த 40 டன் தங்கத்தை அமெரிக்க அரசு நிதி ஆதாரத்திற்காக விற்பனை செய்யத் துவங்கியதா அல்லது மற்ற நாடுகள் வெளியேற்றியதா என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.

இதேவேளையில் கடந்த சில வருடத்தில் நெதர்லாந்து New York Federal Reserve-ல் இருந்து 86 டன் தங்கத்தையும், பிரான்ஸ் 129 டன் தங்கத்தையும் வெளியேற்றி சொந்த நாட்டிற்குக் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்-ஐ நம்ப தயாராக இல்லை

டிரம்ப் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளைக் குறிவைத்து நடவடிக்கை எடுத்து வரும் வேளையிலும், வரி, வர்த்தக தடை, கொள்கை அளவில் நிலைப்பாடு இல்லாத காரணமாக ஐரோப்பிய நாடுகளும் டிரம்ப்-ஐ நம்ப தயாராக இல்லை என்ற நிலைப்பாடு ஆசியாவைத் தாண்டி தற்போது ஐரோப்பாவிலும் எழுந்துள்ளது.

Share This Article

English summary

Goldman Sachs Shocking Report: Central Banks Buy 79 Tonnes of Gold in August as Nations Fear Trump Sanctions

Goldman Sachs Shocking Report: Central Banks Buy 79 Tonnes of Gold in August as Nations Fear Trump Sanctions — டிரம்ப் கையில் ‘Gold’ இருந்தால் அவ்வளவு தான்.. மொத்தமும் அம்பேல்.. ரஷ்யா கற்றுக்கொடுத்த பாடம்! — Why Are Central Banks Buying Gold at 4.6x Historical Rates? Dollar Weaponization and Asset Protection Explained — Global Gold Reserve Shift: Why Central Banks Are Withdrawing Gold From New York Fed to Home Vaults

Story first published: Saturday, October 24, 2026, 11:36 [IST]

Other articles published on Oct 24, 2026

Read More

Previous Post

“என் குழந்தையை நான் விற்றுவிட்டேனா? மிரட்டிய போலீஸ்! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர் பேட்டி | Gingee missing girl mother was investigated by cbcid

Next Post

காவலில் உயிரிழந்த கைதிக்கு பலத்த காயங்கள் – Malaysiakini

Next Post

காவலில் உயிரிழந்த கைதிக்கு பலத்த காயங்கள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin