• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டிரம்பை சுட்டது யார்? FBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 14, 2024
in உலகம்
Reading Time: 2 mins read
0
டிரம்பை சுட்டது யார்? FBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ். முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இந்த சம்பவத்தான் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்

வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் என்ற இடத்தில், குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப், பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் டிரம்பை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் காதில் காயம் அடைந்த டிரம்ப், “மைக் STAND” பின்புறம் குனிந்து உயிர் தப்பினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டால் பரப்புரை கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட்டனர். உடனடியாக டிரம்பின் பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்துகொண்டு பாதுகாப்பு அரணை ஏற்படுத்தினர்.

விளம்பரம்

துப்பாக்கிச்சூட்டில் டிரப்பின் வலது காதில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரது முகத்தில் ரத்தம் வழிந்தது. இதையடுத்து டிரம்பை அவரது பாதுகாவலர்கள் மேடையிலிருந்து பத்திரமாக அழைத்துச்சென்றனர். அப்போது டிரம்ப் தனது கையை மேல்நோக்கி உயர்த்தி ஆக்ரோஷமாக முழங்கினார்.

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருவர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காதில் காயம் ஏற்பட்ட டிரம்ப் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிரம்ப் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

இந்நிலையில் பிரச்சாரத்தின்போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ய முயன்ற நபர் பென்சில்வேனியாவைச் சேர்ந்த 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பதும், அவர் ஏ.ஆர். ரக அசால்ட் ரைபிளை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இவரை பற்றிய மேலும் விவரங்கள் கிடைத்தால் உடனடியாக தருமாறு எப்.பி.ஐ போலீசார் அமெரிக்க மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் ஒருபோதும் இடம் கிடையாது எனக் கூறினார்.

விளம்பரம்

இந்த வெறுக்கத்தக்க செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இது மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் இருக்க நமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

I have been briefed on the shooting at former President Trump’s event in Pennsylvania.

Doug and I are relieved that he is not seriously injured. We are praying for him, his family, and all those who have been injured and impacted by this senseless shooting.

We are grateful to…

— Vice President Kamala Harris (@VP) July 14, 2024

விளம்பரம்

இந்த சம்பவத்திற்கு தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை என தெரிவித்துள்ளார். டிரம்ப் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

There is absolutely no place for political violence in our democracy. Although we don’t yet know exactly what happened, we should all be relieved that former President Trump wasn’t seriously hurt, and use this moment to recommit ourselves to civility and respect in our politics.…

— Barack Obama (@BarackObama) July 13, 2024

விளம்பரம்

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
அரசியல், ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Deeply concerned by the attack on my friend, former President Donald Trump. Strongly condemn the incident. Violence has no place in politics and democracies. Wish him speedy recovery.

Our thoughts and prayers are with the family of the deceased, those injured and the American…

— Narendra Modi (@narendramodi) July 14, 2024

தனது தந்தைக்காகவும், அர்த்தமற்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்த மக்களுக்கு டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Thank you for your love and prayers for my father and for the other victims of today’s senseless violence in Butler, Pennsylvania. I am grateful to the Secret Service and all the other law enforcement officers for their quick and decisive actions today. I continue to pray for our…

— Ivanka Trump (@IvankaTrump) July 14, 2024

டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அமெரிக்க உளவுத்துறை தலைவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னாள் அதிபர் George W. Bush, அமெரிக்க நாடாளுமன்ற தலைவர் நான்ஸி பெலோசி, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

.



Read More

Previous Post

கடத்தலில் இருந்து மீண்டவர்; மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிர் பிழைத்தவர்; கௌதம் அதானியின் வெற்றிக்கதை

Next Post

சிங்கப்பூரில் நர்சிங் துறையில் கூடுதல் வேலை வாய்ப்பா?

Next Post
சிங்கப்பூரில் நர்சிங் துறையில் கூடுதல் வேலை வாய்ப்பா?

சிங்கப்பூரில் நர்சிங் துறையில் கூடுதல் வேலை வாய்ப்பா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin