அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ஈரான் தொடர்பான தாக்குதல் எச்சரிக்கையானது, பிரித்தானியா அரசு மற்றும் மொரிஷியஸ் இடையிலான டியாகோ கார்சியா ஒப்பந்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில் முக்கியமான இராணுவத் தளத்தை கொண்டுள்ளது.
இந்தத் தீவு ஈரான் மீது சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தீவை ஒப்படைக்க வேண்டாம்
கடந்த புதன்கிழமை தனது Truth Social சமூக வலைதளத்தில் பதிவிட்ட ட்ரம்ப்,
பிரித்தானிய பிரதமரை தீவை மொரீஷியசுக்கு ஒப்படைக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.

“ஈரான் அணு ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை என்றால், டியாகோ கார்சியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள Fairford விமானத் தளத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம்” என்று அவர் கூறினார்.
இந்தக் கருத்து, பிரித்தானியா – மொரீஷியஸ் இடையிலான நீண்டகால சட்டப் போராட்டத்தின் பின்னணியில் வெளிவந்துள்ளது.
1960களில் மொரீஷியசுக்கு சுதந்திரம் அளிக்கும் போது, சாகோஸ் தீவுகளை பிரித்தானியா தனதாக்கி கொண்டது.
மொரீஷியஸ் திட்டம்
பின்னர் பல ஆண்டுகளாக மொரீஷியஸ் அந்தத் தீவுகள் மீதான உரிமையை வலியுறுத்தி வந்தது.
2025 மே 22 அன்று லண்டன் மற்றும் போர்ட் லூயிஸ் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டது.

அதன்படி, சாகோஸ் தீவுகளின் இறையாண்மை மொரீஷியசுக்கு மாற்றப்படும். ஆனால், டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க – பிரிட்டிஷ் இராணுவத் தளம் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் தொடரும் என கூறப்பட்டது.
எனினும், சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள் மொரீஷியசுக்கு திட்டமிட்டிருந்த பயணத்தை ஒத்திவைத்துள்ளனர்.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்கள் Boris Johnson மற்றும் Liz Truss ஆகியோர் ட்ரம்பை இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக நிலைபெற செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2003இல் Iraq மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பில் இந்தத் தளம் முக்கிய பங்கு வகித்தது.
பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவதாவது, டியாகோ கார்சியாவில் உள்ள நீளமான ஓடுதளம் B-1, B-2, B-52 போன்ற கனரக குண்டுவீச்சு விமானங்களை ஏற்ற இறக்க உதவுகிறது.
இது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களின் எல்லைக்கு வெளியே இருப்பதால், நீண்டகால இராணுவ நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமானது.
அமெரிக்க அரசியலில், டியாகோ கார்சியாவுக்கு உறுதியான அணுகல் தேசிய பாதுகாப்பு அவசியம் என சிலர் வலியுறுத்துகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

