டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தம் தொடர்பான விவாதம் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான இன்றைய (18.12.2025) நாடாளுமன்ற நடவடிக்கைகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளன.
அதன்படி காலை 09.30 முதல் 09.45 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 09.45 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலை 10.00 முதல் மாலை 5.30 வரை மோசமான காலநிலையின் தாக்கத்தால் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம இடம்பெறவுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் இன்று விசேட அமர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

