Last Updated:
உச்ச நீதிமன்றம், டிஜிபி பரிந்துரைகளை நேரத்தில் அனுப்பாத மாநிலங்களுக்கு நடவடிக்கை எடுக்க UPSCக்கு அதிகாரம் வழங்கி, தெலங்கானா வழக்கில் கடும் உத்தரவு பிறப்பித்தது.
டிஜிபி பதவிக்கு உரிய நேரத்தில் பெயர்களை பரிந்துரைக்காத மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நாடலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானாவில் காவல் துறை தலைவராக சிவதர் ரெட்டி நியமிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. யூபிஎஸ்சி தாக்கல் செய்த இந்த மனுவில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தெலங்கானா மாநிலத்தில் டிஜிபி நியமனத்திற்கு முறையான பரிந்துரைகளை மாநில அரசு அனுப்பவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மாநில காவல் துறை தலைவர் பதவிகளுக்கு உரிய நேரத்தில் பரிந்துரைகளை அனுப்புமாறு மாநிலங்களுக்கு கடிதம் எழுத தேர்வாணையத்திற்கு அதிகாரம் வழங்குவதாக உத்தரவிட்டது.
மேலும், டிஜிபி பரிந்துரைகளை உரிய நேரத்தில் அனுப்பாத மாநிலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை யுபிஎஸ்சி நாடலாம் எனவும், அந்த மனுக்கள் குறித்து தொடர்புடைய மாநிலங்களிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டு பொறுப்பு மீறல் நடைபெற்று இருந்தால் மாநில அரசின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


