டிஜிட்டல் பேமென்ட்கள் என்பது நம்முடைய அன்றாட டிரான்ஸாக்ஷன்களை விரைவாகவும், எளிமையாகவும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் அமைகிறது. இந்த காரணத்தினால் டிஜிட்டல் பேமென்ட்கள் அதிக அளவில் பிரபலமடைந்து இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான யூசர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே டிஜிட்டல் பேமென்ட்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு மோசடிகளும் நடைபெறுகின்றன. ஆகையால் பாதுகாப்பான பேமென்ட் செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலமாக உங்களுடைய டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்தலாம். அப்படியான சில வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.
பேமென்ட் செலுத்துவதற்கு முன்பு எப்போதும் சரிபார்க்கவும்:
எந்த ஒரு பேமென்டாக இருந்தாலும் சரி, அதனை செய்வதற்கு முன்பு ஸ்கிரீனில் காணப்படும் பெயரை கவனியுங்கள். நீங்கள் பேமென்ட் செலுத்த நினைக்கும் நபர் அல்லது பிசினஸ் அதுதானா என்பதை உறுதிப்படுத்துங்கள். சில வினாடிகள் மட்டும் எடுத்துக்கொண்டு, தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க இந்த சிறு வேலையை செய்ய மறந்துவிடாதீர்கள்.
நம்பகமான பேமென்ட் அப்ளிகேஷன்கள், வெப்சைட்டுகளை மட்டுமே பயன்படுத்தவும்:
எப்போதும் அதிகாரப்பூர்வ மற்றும் நன்கு அறிந்த அப்ளிகேஷன்கள் அல்லது வெப்சைட்டுகள் மூலமாக மட்டுமே நீங்கள் பேமென்ட்டுகளை செய்ய வேண்டும். உங்களுக்கு தெரியாத அல்லது நம்பிக்கை இல்லாத நபர்கள் அனுப்பும் அப்ளிகேஷன்கள் அல்லது லிங்குகளை டவுன்லோட் செய்யக்கூடாது.
உங்களுடைய PIN அல்லது OTP-ஐ யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்:
உங்களுடைய UPI PIN, OTP அல்லது வங்கி விவரங்கள் ஆகியவை மிகவும் ரகசியத்திற்கு உட்பட்ட தகவல்கள். எனவே, அவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வங்கி அல்லது போலீஸ் அல்லது அரசு அதிகாரி என்று கூறினால்கூட இது போன்ற விவரங்களை நீங்கள் யாருக்கும் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
ஒருவர் உங்களிடம் அவசரமாகவும், விரைவாக பேமென்ட் செய்ய கூறினாலோ அல்லது உங்களுடைய விவரங்களை அவசரமாக பகிர்ந்து கொள்ள கேட்டாலோ ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டு யோசித்துப் பாருங்கள். ஒருமுறை சரிபார்த்துவிட்டு மீண்டும் போன் செய்கிறேன் என்று அவர்களிடம் கூறுங்கள். உங்களுக்கான போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.
பேமென்ட் அலர்ட்டுகளை ஆன் செய்து வைக்கவும்:
உங்களுடைய பேமென்ட் சம்பந்தமாக SMS மற்றும் அப்ளிகேஷன் நோட்டிஃபிகேஷன்களை எப்போதும் எனேபிள் செய்து வையுங்கள். அப்படி உங்களுக்கு வரும் ஒவ்வொரு நோட்டிஃபிகேஷனையும் நீங்கள் கவனமாக படிக்க வேண்டும். ஒருவேளை அவற்றில் ஏதாவது தவறு இருப்பதாக நீங்கள் கவனித்தால் உடனடியாக வங்கி அல்லது பேமென்ட் அப்ளிகேஷனை தொடர்பு கொள்ளுங்கள்.
சந்தேகத்திற்கு உரிய நபர்களை 1930 என்ற நேஷனல் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் நம்பரை அழைப்பதன் மூலமாக புகார் செய்யலாம் அல்லது https://sanchez aathi.gov.in/sfc/ என்ற தொலைத்தொடர்பு துறையின் வெப்சைட்டில் புகாராக பதிவு செய்யலாம். இதுபோன்ற மெசேஜ்களை சேமித்து வைப்பது, ஸ்கிரீன் ஷாட்கள் எடுத்து, நீங்கள் பேசிய போன் கால்களை பதிவு செய்து வைப்பது புகார் வழங்கும்போது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
July 14, 2025 7:58 PM IST
டிஜிட்டல் பேமென்ட் பண்ணும்போது, மோசடியில் மாட்டிக்காம இருக்கணுமா…? இந்த 5 விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க…!

