டிஜிட்டல் தொழில் நுட்பத்தை மலேசியர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். இன்று மைடின் பேராங்காடியில் நடைபெற்ற மொபைல் இ-வாலட் செயலியான MYDINPay தொடக்க விழாவின் போது தெரிவித்தார். உலகளவில் டிஜிட்டல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் மலேசியர்களும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப மைடின் அதன் பங்களிப்பினை வழங்கி வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக மைடின் பேராங்கடியின் இயக்குநர் டத்தோ வீரா ஹாஜி அமீர் அலியின் முற்போக்கான சிந்தனை நாட்டின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பயனளிக்கும் வகையில் இருக்கிறது. MYDINPay இன் வெளியீடு எங்கள் டிஜிட்டல் மாற்றம் பயணத்தில் ஒரு மைல்கல். இந்த செயலி பரிவர்த்தனைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்க தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் மற்றும் பலன்களை வழங்குகிறது.


MYDINPay நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சிக்கான பங்களிப்பினை வழங்கி வருகிறது. மைடின் ஒரு முன்னுதாரணமாக திகழந்து வருவது பெரும் மகிழ்ச்சியான விஷயமாகும். மலேசியர்கள் பலர் இன்னும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். காலத்திற்கேற்ப நாம் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஏற்று கொள்ள பழகினால் மட்டுமே வளர்ச்சிகேற்ப நாமும் முன்னோக்கி செல்ல முடியும் என்கிறார் கோபிந்த் சிங். மேலும் 150 ரிங்கிட்டிற்கு மேல் பொருட்களை வாங்கும் முதல் 3,000 பேருக்கு 5 விழுக்காடு கேஷ் பேக் வழங்குவது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.


