Last Updated:
நீதிபதி நிஷா பானு, சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு, டிசம்பர் 20க்குள் கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியில் சேர குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக விடுப்பில் இருக்கும் நீதிபதி நிஷா பானு வரும் டிசம்பர் 20-ம் தேதிக்குள் கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியில் சேர குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நிஷா பானு, பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் பணியிட மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 13-ம் தேதி கேரள உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி நிஷா பானு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தில் இது வரை நிஷா பானு பதவி ஏற்காமல் கடந்த அக்டோபர் 14-ம் தேதியில் இருந்து நீதித்துறை சார்ந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் விடுப்பில் இருந்து வருகிறார்.
டிசம்பர் 20-ம் தேதிக்குள் கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியில் சேர நீதிபதி நிஷா பானுவுக்கு உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi
December 13, 2025 9:51 AM IST


