Last Updated:
டிசிஎஸ் நடப்பாண்டுக்கான ஊதிய உயர்வை ஒத்திவைத்துள்ளது. டிரம்ப்பின் வரி அறிவிப்புகள் காரணமாக பொருளாதார நிலைமையின்மை ஏற்பட்டுள்ளது. இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களும் இதே முடிவை எடுக்கலாம்.
வருவாய் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக உள்ள டிசிஎஸ் நடப்பாண்டுக்கான ஊதிய உயர்வை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்பால் சர்வதேச அளவில் பொருளாதார நிலையில்லாத் தன்மையில் உள்ளது. இதனால் வர்த்தகம், சேவை துறைகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
இந்த காரணத்தினால், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊதிய உயர்வை ஒத்திவைப்பதாக டிசிஎஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் மாதங்களில் வரி விதிப்பு, உற்பத்தி தொடர்பான தெளிவு கிடைக்கும் போது ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கொரோனா ஊரடங்கின் போது இது போன்ற அறிவிப்பை ஐடி நிறுவனங்கள் வெளியிட்டன. தற்போது மீண்டும் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ஐடி ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரும் வாரத்தில் வெளியாக உள்ளன. அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களும் ஊதிய உயர்வு தொடர்பாக இதே போன்ற முடிவை எடுக்க கூடும் என கூறப்படுகிறது.
April 12, 2025 8:17 AM IST


