Last Updated:
ஐபிஎம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் அறிவித்துள்ளது இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படலாம்.
டிசிஎஸ், அமேசானை தொடர்ந்து பிரபல மென்பொருள் நிறுவனமான ஐபிஎம் உலக அளவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
உலக அளவில் உள்ள ஐடி பணியாளர்களில் 30 முதல் 35 விழுக்காட்டினர், அதாவது, சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நான்காவது காலாண்டில், உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களில் ஒற்றை இலக்க சதவிகிதத்தில் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக ஐபிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பணி இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, நூற்றுக்கணக்கானோர் பணியிழக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம், நிர்வாக மறுசீரமைப்பை காரணமாக கூறி, அமெரிக்காவில் மட்டும் 9 ஆயிரம் பணியாளர்களை ஐபிஎம் பணி நீக்கம் செய்தது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள ஐபிஎம் அதற்கான காரணத்தை தெளிவுப்படுத்தவில்லை. மூன்றாவது காலாண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் வருவாய் 7 விழுக்காடும், நிகர லாபம் 11 சதவிகிதமும் அதிகரித்தது. எனவே, செயற்கை நுண்ணறிவு மூலம் வருவாய் அதிகரிப்பை கண்ட நிறுவனம், ஆட்களை குறைத்து, கூடுதல் வருவாய் ஈட்ட முடிவு செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
November 06, 2025 8:43 AM IST


