Last Updated:
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆகாசா ஏர் விமான நிறுவனம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆகாசா ஏர் விமான நிறுவனம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
இந்த கூடுதல் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆகாசா ஏர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, விமான டிக்கெட்டுகளின் விலை 199 ரூபாய் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பயண தூரம் மற்றும் பயண நேரத்தை பொறுத்து இது மாறுபடும் என்றும், நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது எனவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டு பயணத்திற்கு 425 ரூபாய் வரையும் வெளிநாட்டு பயணங்களூக்கு 2300 வரையும் உயர்த்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு டிக்கெட்டுகளுக்கு 399 வரையும், வெளிநாட்டு பயணங்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது.


