டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கூடுதல் கலெக்டரிடம் மனு. புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல் நேற்று அரிமளம் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளை ஆய்வுசெய்தார். ஏம்பல் பகுதிக்கு வந்த கூடுதல் கலெக்டரை கிராம மக்கள் வரவேற்று கோரிக்கை மனு ஒன்றைக்கொடுத்தனர்.
அதில் ஏம்பல் பஸ்நிலையம் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை விரைவில் அகற்ற கோரியிருந்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட கூடுதல் கலெக்டர் தக்க நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தார்.
சாலை விரிவாக்கப்பணிகள்,கட்டட கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அவருடன் அரிமளம் ஒன்றிய ஆணையர் சிங் காரவேலு,பிடிஓ சரவணராஜா,ஒன்றிய பொறியாளர்கள்,ரெவன்யூ அதிகாரிகள் வந்திருந்தனர்.
அரிமளம் ஒன்றியம் ஏம்பலில் கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல் ஆய் வு செய்தார்.
The post டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கூடுதல் கலெக்டரிடம் மனு!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin