• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘டாப் 2’-வில் நிறைவு செய்ய மும்பை இந்தியன்ஸுக்கு பொன்னான வாய்ப்பு! | Mumbai Indians got a golden opportunity to finish in Top 2 ipl 2025

GenevaTimes by GenevaTimes
May 25, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘டாப் 2’-வில் நிறைவு செய்ய மும்பை இந்தியன்ஸுக்கு பொன்னான வாய்ப்பு! | Mumbai Indians got a golden opportunity to finish in Top 2 ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்றை ‘டாப் 2’ அணிகளில் ஒன்றாக நிறைவு செய்வதற்கான பொன்னான வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகளும் சீசனில் இருந்து வெளியேறிய அணிகளுடன் 13-வது லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. இருப்பினும் ‘டாப் 2’ இடத்தில் எந்த அணி நிறைவு செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறது. ஏனெனில், பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இரண்டு முறை கிடைக்கும்.

நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ‘டாப் 2’-வில் நிறைவு செய்வதற்கான பொன்னான வாய்ப்பை வழங்கி உள்ளது.

குஜராத் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் மற்றும் பெங்களூரு 17 புள்ளிகளுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இதில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் நாளை பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. குஜராத் அணி, இன்று சிஎஸ்கே அணியுடன் விளையாடுகிறது. பெங்களூரு அணி லக்னோவுடன் செவ்வாய்க்கிழமை விளையாடுகிறது.

குஜராத் டைட்டன்ஸ்: சிஎஸ்கே உடனான கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணி வென்றால் முதல் சுற்றை முதலிடத்தில் நிறைவு செய்யும். இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவி, பெங்களூரு லக்னோவை வீழ்த்தியும், மும்பை பஞ்சாப் அணியை வீழ்த்தினால் ரன் ரேட் அடிப்படையிலும், பஞ்சாப் மும்பையை வீழ்த்தினால் புள்ளிகள் அடிப்படையிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வாய்ப்பை குஜராத் இழக்கும்.

பஞ்சாப் கிங்ஸ்: மும்பை இந்தியன்ஸ் உடனான கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெல்ல வேண்டும். அதோடு ஆர்சிபி, குஜராத் அணிகள் கடைசி லீக் ஆட்டத்தை இழந்தால் ‘டாப் 2’ இடத்தில் பஞ்சாப் நிறைவு செய்யும். மும்பை உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் ‘டாப் 2’ இடத்தை பஞ்சாப் அணி பிடிக்காது.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: லக்னோ உடனான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெறவேண்டியது அவசியம். அதோடு குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவ வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ‘டாப் 2’ இடத்தில் ஆர்சிபி அணி முதல் சுற்றை நிறைவு செய்யாது.

மும்பை இந்தியன்ஸ்: பஞ்சாப் உடனான கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்ல வேண்டும். ஆர்சிபி, லக்னோ உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் டாப் 2 இடத்தை பிடிக்க முடியும். இதில் போனஸாக குஜராத் அணியும் தோல்வியை தழுவினால் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு கூட மும்பைக்கு உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் அதற்கு காரணமாக அமைந்துள்ளது.



Read More

Previous Post

ஏழு தலைமுறைகளாக முகலாய ஓவியம் வரையும் ஒரே குடும்பம் – வாராணாசியில் 5 வயதில் ஓவியரான வாரிசு | family in Varanasi painting Mughal style arts for seven generations

Next Post

என்ஓசி நடைமுறை விவகாரம்: வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | NOC Procedure Issue: High Court Orders Banks

Next Post
என்ஓசி நடைமுறை விவகாரம்: வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | NOC Procedure Issue: High Court Orders Banks

என்ஓசி நடைமுறை விவகாரம்: வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | NOC Procedure Issue: High Court Orders Banks

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin