டாடா மோட்டார்ஸ் பெயர் மாற்றம்.. ஏன் இந்த திடீர் முடிவு?
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது பெயரை மாற்றியுள்ளது. டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தனது வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகன வர்த்தகத்தை தனித்தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் தற்போது மக்களுடன் நெருங்கிய தொடர்பை உருவாக்கவும், பிராண்ட் பெயரை மேலும் பிரபலமாக்கும் முயற்சியில் புதிய பெயரை கொண்டு சந்தையில் மீண்டும் புத்தம் புதியாக அறிமுகமாக உள்ளது.
தற்போது டாடா மோட்டார்ஸ் பேசேஞ்சர் வெஹிக்கல் என்ற பெயரில் இயங்கி வரும் இப்பரிவு இனி டாடா.கார்ஸ் என்ற புதிய பிராண்ட் பெயரில் இயங்கும். டாடா.கார்ஸ் என்பது வெறும் பிராண்ட் அடையாளமாக மட்டுமே இருக்கும், பங்குச்சந்தையில் அதே பெயருடன் இயங்கும் என இந்நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த 30 வருடங்களாக மக்களுடன் ஒன்றிணைந்து இருக்கும் டாடா மோட்டார்ஸ் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி வேகமாக ஒடிக்கொண்டு இருக்கையில் டாடா.கார்ஸ் என்ற பிராண்ட் அறிமுகம் முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபலமாகும் பொருட்டு டாடா.கார்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு. இதேபோல் டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களுக்காக டாடா.ஈவி என்ற பிராண்டையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த அனைத்து மாற்றமும் டாடா மோட்டார்ஸ் வர்த்தகத்தை இரண்டாக உடைக்கப்பட்ட பின் வெறும் 10 மாதத்தில் நடந்துள்ளது மூலம் டாடா குழுமம் வேகமாக ஓடுவது காட்டுகிறது.
டாடா மோட்டார்ஸ் ஆட்டோமொபைல் துறையில் தான் இழந்த இடத்தை ஜாகுவார் லேண்ட்ரோவர் வர்த்தகத்தை கைப்பற்றியதில் இருந்து மெல்ல மெல்ல மெருகேற்றி தற்போது இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஒருப்பக்கம் ஈவி பிரிவில் பெரிய அளவிலான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ், மறுப்புறம் ஹேட்பேக் முதல் எஸ்யூவி வரையில் அனைத்து எரிபொருள் வகையிலும் கார்களை அடுக்கியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ் தனது பழைய பிராண்ட் கார்களை மீண்டும் சந்தைக்கு கொண்டு வரும் முயற்சியில் சியாரா மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இப்புதிய பிராண்டுகளின் அறிமுகம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் உயர்மட்ட நிர்வாகம் பெரும் தடுமாற்றத்தில் இருக்கும் போது நடந்துள்ளது. ஏற்கனவே சந்திரசேகரன், வேகமாக புதிய சேர்மன்-ஐ நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
பல நிறுவனத்தில் முக்கியமான முடிவுகளையும், திட்டங்களையும் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் கால தாமதம் செய்யாமல் விரைவாக சேர்மன் பதவிக்கு புதிய நபரை தேர்வு செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.

