• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டாடா குழுமத்தின் ஓனர் யார்..? நோயல் டாடாவின் உண்மையான அதிகாரம் என்ன தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க! | Who Truly Owns Tata Sons? Noel Tata Holds Just 1% Stake – Inside the 158-Year-Old Ownership vs Control Rule Protecting the $300B+ Tata Group

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டாடா குழுமத்தின் ஓனர் யார்..? நோயல் டாடாவின் உண்மையான அதிகாரம் என்ன தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க! | Who Truly Owns Tata Sons? Noel Tata Holds Just 1% Stake – Inside the 158-Year-Old Ownership vs Control Rule Protecting the $300B+ Tata Group
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டாடா குழுமத்தின் ஓனர் யார்..? நோயல் டாடாவின் உண்மையான அதிகாரம் என்ன தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமத்தில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வெடித்து வரும் வேளையில், டாடா குழுமத்தின் ஓனர் யார்..? நோயல் டாடாவின் உண்மையான அதிகாரம் என்ன..? என்பது குறித்துப் பல கேள்விகள் எழுந்து வருகிறது.

டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீத பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்டும், அதன் தலைவர் நோயல் டாடாவும் தான் டாடா சாம்ராஜ்ஜியத்திற்கு ஓனர் என அனைவரும் நினைத்து வருகின்றனர்.

டாடா குழுமத்தின் ஓனர் யார்..? நோயல் டாடாவின் உண்மையான அதிகாரம் என்ன தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

நோயல் டாடா தான் ஓனரா..?

ஆனால் உண்மையில் நோயல் டாடா அவர்கள் டாடா சன்ஸ் நிறுவனத்தில் வெறும் 1 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். ஏன்.. டாடா குடும்பமான நோயல் டாடா, ரத்தன் டாடா , ஜிம்மி டாடா ஆகியோர் மற்றும் அவர்களின் பிள்ளைகள், என மொத்த டாடா குடும்பத்தையும் சேர்த்தாலும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் வெறும் 2.84 சதவீத பங்குகள் மட்டுமே டாடா குடும்பம் வைத்துள்ளனர். அப்படியானால் 66 சதவீத டாடா சன்ஸ் பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட் யாருடையது..?

டாடா டிர்ஸ்ட்

பலரும் டாடா டிர்ஸ்ட் அமைப்பை டாடா குழுமத்தை ஆள்வதற்கும், வரி சுமையை குறைத்து சொத்து சேர்பதற்கும் உருவாக்கப்பட்ட டிரஸ்ட் என நினைகிறார்கள். டிரஸ்ட்-ல் இரண்டு வகை உள்ளது, ஒன்று குடும்ப டிரஸ்ட் அதாவது தனியார் டிரஸ்ட், மற்றொரு டிரஸ்ட் பொதுநல சேவைக்காக உருவாக்கப்படும் டிரஸ்ட்.

தனியார் டிரஸ்ட்-களை தனிநபர் அல்லது அமைப்பால் நிர்வாகம் செய்ய முடியும். ஆனால் பொதுநல டிரஸ்ட் என்பது பதிவு செய்யப்பட்டு, முறையாக நிர்வாகம் செய்யப்பட வேண்டும், Charity Commissioner கீழ் கண்காணிப்பில் இருக்கும். சரி விஷயத்திற்கு வருவோம், டாடா குழுமத்தின் நீண்ட கால வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு திறன்மிக்க அமைப்பாக டாடா டிரஸ்ட் விளங்குகிறது. எப்படி..?

ஜாம்ஷெட்ஜி டாடா போட்ட விதை

1892 ஆம் ஆண்டு டாடா குழுமத்தை உருவாக்கிய ஜாம்ஷெட்ஜி டாடா இந்தியாவில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு (சாதி, மதம், பாலினம் பாகுபாடு இன்றி) வெளிநாட்டில் படித்து பட்டம் பெற உதவி செய்ய வேண்டும் என்பதற்காக JN Tata Endowment என முதல் பொதுநல டிரஸ்ட் அமைப்பை உருவாக்கினார்.

இவருக்குப் பின்பு சர் டோராப்ஜி, சர் ரத்தன் டாடா என அனைத்து தலைவர்களும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருக்கும் அவர்களின் சொத்துக்களை, பங்குகளை, இது தவிர அவர்களின் தனிப்பட்ட சொத்துகள் என அனைத்தையும் பொதுமக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் வகையில் சொத்துக்களை இணைத்து டிரஸ்ட் அமைப்பை உருவாக்கினார்.

2 பிரிவு

இதன் மூலம் டாடா குழுமத்தில் ஆரம்பம் முதல் 2 பிரிவுகளாக டாடா சன்ஸ் பங்குகளை நிர்வாகம் செய்து வருகின்றனர். டாடா டிரஸ்ட் அமைப்பில் 66 சதவீதமும், டாடா குடும்பத்திடம் 2.84 சதவீத பங்குகளையும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் வைத்துள்ளனர். இப்படிப் பார்க்கும் போது டாடா டிரஸ்ட் தான் டாடா குழுமத்தின் ஓனர்.

கோடு போட்டு வாழும் டாடா குழுமம்

இங்கு தான் வித்தியாசம் உருவாகிறது, டாடா குழுமத்தை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானம் செய்யப் பல விதிகள் உள்ளது, இதை Articles of Association என அழைக்கப்படுகிறது.

இப்படி டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஆரம்பம் முதல் நிறுவனத்தின் உரிமைக்கும் (Ownership), நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும் (Control) கோடுப்போடப்பட்டு உள்ளது.

டாடா டிர்ஸ்ட் அமைப்புகள் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீத பங்குகளை (2/3 அளவு) வைத்திருந்தாலும், டாடா சன்ஸ் நிர்வாகத்தில் டாடா டிரஸ்ட்-ன் அதிகாரம் 1/3 அளவில் தான் உள்ளது.

அதாவது நிர்வாக முடிவில் டாடா டிர்ஸ்ட் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என்பதைத் திட்டமிட்டு விதியாகக் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது உரிமை ஒருபக்கம், நிர்வாகம் ஒருபக்கம் இருக்க வேண்டும் என டாடா குழுமத்தை உருவாக்கி ஜாம்ஷெட்ஜி டாடாவே விதியை வகுத்துள்ளார்.

முக்கிய சிக்கல்

டாடா சன்ஸ் நிர்வாகத்தை டாடா டிரஸ்ட் எடுக்க முயன்றால் சட்ட விதிகள் அதற்கு இடம் கொடுக்காது. இதற்கிடையில் மற்றொரு முக்கியமான சிக்கலை ரத்தன் டாடா நீக்கினார், டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தை ஓரே தலைவர் நிர்வாகம் செய்யக்கூடிய விதியை ரத்து செய்தார்.

இதன் மூலம் நோயல் டாடா வெறும் 1 சதவீத பங்குகள் உடன் டாடா சன்ஸ் நிறுவனத்தை ஆதிக்கம் செலுத்த முடியாது. டாடா குழுமம் இதை திட்டமிட்டு கட்டமைப்பட்ட விதிகளாக உள்ளது.

இதன் மூலம் டாடா குழுமத்தை எந்த ஒரு தனிநபரும் சொந்தம் கொண்டாட முடியாது. டாடா குழுமம் தன்னுடைய இன்ஜினியரிங் மூளையை நிறுவனம், வர்த்தகத்தில் மட்டுமல்ல நிர்வாகத்திலும் பெரிய அளவில் பயன்படுத்தியுள்ளது.

இதனாலேயே 1868 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டாடா குழுமம் 158 வருடங்கள் கடந்தும் இன்று வரையில் வலிமையுடன் உள்ளது.

Share This Article

English summary

Who Truly Owns Tata Sons? Noel Tata Holds Just 1% Stake – Inside the 158-Year-Old Ownership vs Control Rule Protecting the $300B+ Tata Group

Who Truly Owns Tata Sons? Noel Tata Holds Just 1% Stake – Inside the 158-Year-Old Ownership vs Control Rule Protecting the $300B+ Tata Group — டாடா குழுமத்தின் ஓனர் யார்..? நோயல் டாடாவின் உண்மையான அதிகாரம் என்ன தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Story first published: Wednesday, September 23, 2026, 13:44 [IST]

Other articles published on Sep 23, 2026

Read More

Previous Post

லண்டன் சுறாக்களுக்கு நடுவே காதலன் செய்த வேலை.. திடீர்னு கட்டிப்பிடித்த காதலி! என்ன நடந்தது? | Shark Proposal in England.. What Did the Boyfriend Do Underwater That Left His Girlfriend Stunned?

Next Post

தடுப்புச் சோதனையிலிருந்து தப்பிச் சென்ற வாகனம் காவல்துறை அதிகாரி மீது மோதியதில், அவருக்கு கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டது – Malaysiakini

Next Post

தடுப்புச் சோதனையிலிருந்து தப்பிச் சென்ற வாகனம் காவல்துறை அதிகாரி மீது மோதியதில், அவருக்கு கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin