Last Updated:
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், பிப்ரவரி ஒன்றாம் தேதியே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற ஆய்விற்கும், நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே பட்ஜெட்டைச் செயல்படுத்துவதற்கும் போதுமான அவகாசம் அளிக்கும் வகையில், 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆனாலும் அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
வார இறுதியில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2020 மற்றும் 2025 இல் சனிக்கிழமையன்று நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டுகளை பிப்ரவரி 28 ஆம் தேதியன்று முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அந்த இரண்டு நாட்களுமே சனிக்கிழமைகளாகும்.
திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், அது சுதந்திரத்திற்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் 80வது பட்ஜெட்டாகவும் இருக்கும். தொடர்ந்து 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனையை நிர்மலா சீதாராமன் படைப்பார்.
ஞாயிறு அன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்? – சாதனை படைக்கப்போகும் நிர்மலா சீதாராமன்


