பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை, நாளை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ஞானசார தேரரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஞானசார தேரர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

