அவரது பௌலிங்கை சமாளிக்க முடியாமல் கேப்டன் ஜோ ரூட் 5 ரன்களில் ஆட்டமிழக்க பேர்ஸ்டோவும் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழந்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் இன்றைய போட்டியிலும் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. ஆயினும் பும்ராவிற்கு பதிலாக களமிறக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூம் தன்னுடைய பங்கை விட்டுக் கொடுக்கவில்லை.
மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து அவர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவை அடுத்தடுத்து வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிக்கட்டத்தை இரு அணிகளும் அடைந்துள்ளன. 4வது போட்டி துவங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி மிகுந்த திணறலுக்கு பிறகு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களை எடுத்துள்ளது.
இந்த போட்டியில் கடந்த போட்டிகளை போலவே ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. ஸ்பின்னர்கள் அக்சர் படேல் 4 விக்கெட்டுகளையும் ரவி அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.
இந்நிலையில் பும்ராவிற்கு பதிலாக களமிறக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூம் சும்மா இருக்கவில்லை. மாறாக தனது பங்கிற்கு எதிரணியின் முக்கிய விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் வீழ்த்தினார்.
அவரது பௌலிங்கை சமாளிக்க முடியாமல் கேப்டன் ஜோ ரூட் 5 ரன்களில் ஆட்டமிழக்க பேர்ஸ்டோவும் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழந்தார்.
146 கிலோ மீட்டர் வேகத்தில் சிராஜ் போட்ட பந்தை பேர்ஸ்டோவால் எதிர்கொள்ள முடியவில்லை. அவுட்டாகி மௌனமாக பெவிலியனுக்கு திரும்பினார் பேர்ஸ்டோ. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் இங்கிலாந்து அணி தவறவிட்டுள்ளது.
4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்றைய தினம் துவங்கிய நிலையில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த அந்த அணி, ஒரு பேட்ஸ்மேன் கூடுதலாக இருந்தபோதிலும் சிறப்பான ரன்களை அடிக்க தவறியுள்ளது. 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களிலேயே சுருண்டது இங்கிலாந்து அணி.