முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பதவிக்காலத்தில் அவரது தனிச் செயலாளராகவும் பணியாற்றிய முகமது ஜாகிருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாதம் 21 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (12) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேலும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்பிணை மனு நிராகரிப்பு
இந்நிலையில் அவர் தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனுவையும் நீதவான் நிராகரித்தார்.

கூட்டுறவு இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘இசுரு சவியா’ விழாவிற்காக கூட்டுறவு அபிவிருத்தி நிதியத்தால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ. 1.9 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்துவதற்காக, போலி ஆவணங்களைத் தயாரித்தது தொடர்பாக முகமது ஜாகிர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

