ஜோகூர் பாரு:
நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற பத்து வயது சிறுவன், வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று (ஜூன் 25) பிற்பகல் 3.40 மணியளவில் இங்குள்ள டேசா முத்தியாராவில் உள்ள வாய்க்காலில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் தனது சகோதரர் உட்பட மேலும் நால்வருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மீன்பிடி தூண்டிலை இழுக்க முற்பட்ட போது, தவறி வாய்க்காலுக்குள் விழுந்தார்.
“சிறுவன் கீழே விழுந்ததில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் 10 மீ தொலைவில், பிற்பகல் 3.40 மணியளவில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


