மூவார்:
மூவாரிலுள்ள புக்கிட் பக்கிரியில் நேற்று இரவு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மியன்மார் நாட்டவர் ஒருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
உயிரிழந்தவர் 26 வயதான ஹெய்ன் ஹெட், 26, என அடையாளம் காணப்பட்டார் என்று, மூவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி, மூத்த தீயணைப்பு அதிகாரி II பஹருதீன் அப்துல் ரஹ்மான் கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் இரண்டு தீயணைப்பு மீட்பு டெண்டர்கள் (FRT), ஒரு அவசர மருத்துவ சேவை (EMRS) மற்றும் ஒரு தண்ணீர் டேங்கர் ஆகியவற்றுடன் 17 தீயணைப்பு வீரர்களைக் கொண்ட தீயணைப்பு மீட்புக் குழு (PKO) இரவு 8.28 மணிக்கு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, ஒரு நிரந்தர வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்டனர் என்றும், தீயினால் கட்டிடத்தின் 90 சதவிகிதம் எரிந்து நாசமானது என்றும் அவர் சொன்னார்.
“தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.
The post ஜோகூரின் மூவாரில் உள்ள வீட்டில் தீ; மியன்மார் நாட்டவர் ஒருவர் உயிரிழப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.
