கடந்த வியாழக்கிழமை ஜொகூரில் உள்ள தாமான் புக்கிட் இண்டாவில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆறு வயது சிறுவனின் உடல் இன்று ஜெம்போலின் ரோம்பினில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்ட்கப்பட்டது.
நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் அஹ்மத் ஜாபிர் யூசோப், சிறுவனின் 36 வயது தந்தை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார்.
கைது செய்யப்பட்டதன் மூலம் புதைக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், புலனாய்வாளர்கள் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்ததாகவும் அவர் கூனார்.
“இன்று மாலை 4.30 மணியளவில் ரோம்பினில் உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்து ஜெம்போல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது,” என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
“இந்த வழக்கு ஆரம்பத்தில் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் காணாமல் போன நபரின் வழக்காக வகைப்படுத்தப்பட்டது. இப்போது கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் இது விசாரிக்கப்படுகிறது.”
உடல் பிரேத பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
முன்னதாக, ஜூலை 24 ஆம் தேதி அதிகாலை 2.15 மணிக்கு சிறுவனின் தந்தையிடமிருந்து குழந்தை காணாமல் போனது குறித்து புகார் கிடைத்ததாக இஸ்கந்தர் புத்ரி காவல்துறைத் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.
-fmt