ஜெர்மனியில் நடக்கும் வன்முறைப் போராட்டங்களுக்கு காரணம் இடதுசாரிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் செயல் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் அமைதியாகத் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள், நேற்று மாலையில் வன்முறையாக மாறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது கலவரக்காரர்கள் ஜன்னல்களை உடைத்து, கடைகளைச் சூறையாடியதை அடுத்து, காவல்துறை நீர்த்தாரை பீரங்கிகளைப் பயன்படுத்தி பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஹாம்பர்க் ஆகிய நகரங்கள்
பெர்லின், கொலோன் மற்றும் ஹாம்பர்க் ஆகிய நகரங்களிலும் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது போராட்டக்காரர்கள் காவல்துறை அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகள், போத்தல்கள் மற்றும் பட்டாசுகளை வீசி எதிர்ப்பை வெளிப்படத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எட்டுக்கும் மேற்பட்ட நகரங்களில் பெருமளவிலான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், குடியேறிகள் சமூகத்தைச் சேர்ந்த குழப்பவாதிகள் இடதுசாரி தீவிரவாதிகள் மற்றும் பிற தீவிர இடதுசாரிக் குழுக்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அந்நாட்டின் ஆளும் பழமைவாத கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தின் உறுப்பினருமான அலெக்சாண்டர் டோப்ரின்ட் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

