• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஜெலன்ஸ்கி அணிந்து வந்த ஆடையால் கடுப்பான அமெரிக்கா… டிரம்பின் உச்சபட்ச கோபத்திற்கு காரணமான அந்த உடை என்ன?

GenevaTimes by GenevaTimes
March 3, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஜெலன்ஸ்கி அணிந்து வந்த ஆடையால் கடுப்பான அமெரிக்கா… டிரம்பின் உச்சபட்ச கோபத்திற்கு காரணமான அந்த உடை என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 03, 2025 8:43 AM IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வார்த்தை போர், ஜெலன்ஸ்கி அணிந்திருந்த ராணுவ உடையால் ஏற்பட்டது.

News18News18
News18

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வார்த்தை போர் ஏற்பட்ட நிலையில், அதற்கு ஜெலன்ஸ்கி அணிந்திருந்த ராணுவ உடையே முக்கிய காரணம் என குற்றம்சாட்டியது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே முற்றிய வார்த்தை போர், அவ்விரு நாடுகளின் நட்பு நிலைப்பாட்டை அசைத்து பார்த்துள்ளது. இந்த அனல் பறந்த வாக்குவாதத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அணிந்திருந்த ஆடைதான் தூபம் போட்டதாக கூறினால் நம்ப முடிகிறதா. ஆம் அப்படிதான் ட்ரம்பின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அண்டை நாடுகளான ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நிலையில், அப்போதில் இருந்து அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி சூட் ஆடைகள் அணிவதை தவிர்த்து வருகிறார். உலக நாடுகளின் முக்கிய தலைவர்களை சந்திப்பதாக இருந்தாலும் சரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதாக இருந்தாலும் சரி தனது நாட்டு சின்னத்துடன் கூடிய ராணுவ ஆடையையே அணிந்து வருகிறார். நாட்டுக்காக போரில் நின்று போராடும் ராணுவ வீரர்களுடன் துணை நிற்பதை கூறும் வகையில் இந்த உடை அணிவதாக ஜெலன்ஸ்கி இதற்கு முன்பு பல்வேறு தருணங்களில் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வந்த போதும் ஜெலன்ஸ்கியின் இந்த ஆடை தேர்வு அமெரிக்கர்கள் பலரை எரிச்சலூட்டியதாகவே பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தான் அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஆடை பிரச்சனை வெடித்ததாக பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ சந்திப்புகள் அனைத்திலும் சூட் உள்ளிட்ட அலுவல் ஆடைகளை அணிய வேண்டும் என்ற அடிப்படை விதியை பின்பற்ற ஜெலன்ஸ்கிக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் ஆனால் அதை அவர் ஏற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதுவே இருதரப்புக்கும் இடையேயான காரசார வாக்குவாதத்துக்கு தொடக்கப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.

அடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதும் ஜெலன்ஸ்கியிடம் ஏன் சூட் அணியவில்லை என வெள்ளை மாளிகை செய்தியாளர் பிரையன் க்ளென் கேள்வி எழுப்பினார். ஏற்கனவே ட்ரம்புடனான வாக்குவாதத்தால் எரிச்சலடைந்திருந்த ஜெலன்ஸ்கி, போர் முடிந்த பிறகு சூட் அணிவேன் என்று கடுப்புடனும் அது உங்கள் ஆடையைவிட சிறப்பாக இருக்கலாம் என நக்கலுடனும் கூறினார்.

வெள்ளை மாளிகைக்கு வந்து இறங்கிய போதும் சரி சந்திப்பு நிறைவு பெறும் போதும் சரி ஜெலன்ஸ்கியின் ஆடை நன்றாக உள்ளதாக டொனால்டு ட்ரம்ப் கூறினார். இதுவும் ஏளனம் செய்யும் தோணியாகவே பார்க்கப்பட்டது. இந்த ஆடை விமர்சனங்களுக்கு மத்தியில், இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டை சந்திக்க வந்த பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ராணுவ உடை அணிந்திருந்த படங்களை ஜெலென்ஸ்கியின் ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

First Published :

March 03, 2025 8:43 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஜெலன்ஸ்கி அணிந்து வந்த ஆடையால் கடுப்பான அமெரிக்கா… டிரம்பின் உச்சபட்ச கோபத்திற்கு காரணமான அந்த உடை என்ன?

Read More

Previous Post

Gold Rate: தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Next Post

Didakwa kejam terhadap anjing liar – NGO berhimpun bantah Tindakan MPK | Makkal Osai

Next Post
Didakwa kejam terhadap anjing liar – NGO berhimpun bantah Tindakan MPK | Makkal Osai

Didakwa kejam terhadap anjing liar - NGO berhimpun bantah Tindakan MPK | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin