Last Updated:
இந்தத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தெரு அணிவகுப்பு நேற்று மதியம் தொடங்கி இரவு 10 மணி வரை பிரம்மாண்டமாக நடைபெற்றது
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற கார்னிவல் திருவிழாவில் சாலைகளில் மக்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்துள்ளனர்.
பெர்லினின் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக 1996 ஆம் ஆண்டு முதல் கார்னிவல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டுக்கான கார்னிவல் திருவிழா, ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. கார்னிவல் திருவிழாவை கொண்டாட சாலையில் குவிந்த ஆயிரக்கணக்கானோர் கண்கவர் வண்ண உடைகளில் வீதிகளில் உலா வந்து காண்போரை வெகுவாக ஈர்த்தது.
பெர்லின் கார்னிவல் திருவிழா
இந்தத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தெரு அணிவகுப்பு நேற்று மதியம் தொடங்கி இரவு 10 மணி வரை பிரம்மாண்டமாக நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட குழுக்களும், 5,000-க்கும் அதிகமான உலகளாவிய கலைஞர்களும் வண்ணமயமான ஆடைகளுடன், நடனம் மற்றும் இசையோடு பிராங்பர்ட்டர் அலீ (Frankfurter Allee) மற்றும் கார்ல்-மார்க்ஸ் அலீ (Karl-Marx-Allee) தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர். இத்திருவிழாவில் 350-க்கும் மேற்பட்ட உணவு அங்காடிகள் மற்றும் பல மேடைகளில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, பால்கன் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரிய மற்றும் நவீன இசை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.


