• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜெய்ஸ்வால் சதம்: ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷி அரை சதம்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு – ஓவல் டெஸ்ட் | Jaiswal ton Akash Jadeja fifty team india set 374 runs target england oval test

GenevaTimes by GenevaTimes
August 3, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஜெய்ஸ்வால் சதம்: ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷி அரை சதம்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு – ஓவல் டெஸ்ட் | Jaiswal ton Akash Jadeja fifty team india set 374 runs target england oval test
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தன. 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 7. சாய் சுதர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்

யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 51, ஆகாஷ் தீப் 4 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். 3-வது நாளான நேற்று இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. சிறப்​பாக விளை​யாடிய ஆகாஷ் தீப் 70 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் தனது முதல் அரை சதத்தை விளாசி​னார். அவர், அரை சதம் கடந்​ததும் பால்​க​னி​யில் இருந்​த​படி ஒட்​டுமொத்த இந்​திய அணி​யினரும் எழுந்து கைதட்டி பாராட்​டினர். பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் புன்​னகை​யால் வாழ்த்​தி​னார்.

150பந்​துகளில் 107 ரன்​கள் விளாசிய இந்த ஜோடியை ஜேமி ஓவர்​டன் பிரித்​தார். ஆகாஷ் தீப் 94 பந்​துகளில், 12 பவுண்​டரி​களு​டன் 66 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேமி ஓவர்​டன் வீசிய பேக் ஆஃப்தி லென்ந்த் பந்தை லெக் திசை​யில் அடிக்க முயன்ற போது மட்டை விளிம்​பில் பட்டு பேக்​வேர்டு பாயின்ட் திசை​யில் நின்ற கஸ் அட்​கின்​சனிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து ஷுப்​மன் கில் களமிறங்க மதிய உணவு இடைவேளை​யில் இந்​திய அணி 44 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 189 ரன்​கள் எடுத்​தது.

ஜெய்​ஸ்​வால் 85, ஷுப்​மன் கில் 11 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். மதிய உணவுக்கு இடைவேளைக்கு பின்​னர் கஸ் அட்​கின்​சன் வீசிய முதல் பந்​திலேயே ஷுப்​மன் கில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். அவர், 9 பந்​துகளை சந்​தித்து 2 பவுண்​டரி​களு​டன் 11 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து கருண் நாயர் களமிறங்​கி​னார். சீராக ரன்​கள் சேர்த்த ஜெய்​ஸ்​வால் 127 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் தனது 6-வது சதத்தை விளாசி​னார்.

கருண் நாயர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மீண்​டும் ஒரு முறை சரி​யாக பயன்​படுத்​திக் கொள்​ளாமல் ஆட்​ட​மிழந்​தார். 32 பந்​துகளை எதிர்​கொண்ட அவர், 3 பவுண்​டரி​களு​டன் 17 ரன்​கள் எடுத்த நிலை​யில் கஸ் அட்​கின்​சன் பந்​தில் விக்​கெட் கீப்​பர் ஜேமி ஸ்மித்​திடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். இதன் பின்​னர் ஜடேஜா களமிறங்​கி​னார். அற்​புத​மாக விளை​யாடி வந்த ஜெய்​ஸ்​வால் 164 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 14 பவுண்​டரி​களு​டன் 118 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோஷ் டங்க் ஆஃப் ஸ்டெம்​புக்கு வெளியே வீசிய பந்தை விளாசிய போது பேக்​வேர்டு பாயின்ட் திசை​யில் ஜேமி ஓவர்​டனிடம் கேட்ச் ஆனது.

இதையடுத்து துருவ் ஜூரெல் களமிறங்​கி​னார். தேநீர் இடைவேளை​யில் இந்​திய அணி 71 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 304 ரன்​கள் எடுத்திருந்​தது. ஜடேஜா 26 ரன்​களு​ட​னும், துருவ் ஜூரெல் 25 ரன்​களு​ட​னும் களத்தில் இருந்​தனர். தேநீர் இடைவேளைக்கு பின்​னர் இரு​வரும் தொடர்ந்து விளை​யாடி​னார்​கள்.

துருவ் ஜூரெல் 46 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 34 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேமி ஓவர்​டன் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். இதையடுத்து வாஷிங்​டன் சுந்​தர் களமிறங்​கி​னார். ஜடேஜா 72 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் அரை சதம் அடித்​தார். இது அவரது 27-வது அரை சதமாக அமைந்​தது. 82 ஓவர்​கள் வீசப்​பட்ட நிலை​யில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 354 ரன்​கள் எடுத்​திருந்​தது.

அடுத்த 6 ஓவர்களில் ஜடேஜா 53, சிராஜ் 0, வாஷிங்​டன் சுந்​தர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 88 ஓவருக்கு 396 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்​கிலாந்து அணி சார்​பில் கஸ் அட்​கின்​சன் 3, ஜோஷ் டங்க் 5, ஜேமி ஓவர்​டன்​ 2 விக்​கெட்​கள்​ கைப்​பற்​றி இருந்​தனர்​.

இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 13.5 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லியை சிராஜ் போல்ட் செய்தார். பென் டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 324 ரன்கள் தேவை. இந்தியாவின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவை.



Read More

Previous Post

ரகசிய கேமரா பொருத்திய கண்ணாடி மூலம் பூரி ஜெகன்நாதர் கோயிலை வீடியோ எடுத்த நபர்… காவல்துறை நடவடிக்கை என்ன…? | இந்தியா

Next Post

சபா தேர்தலில் மும்முனைப் போட்டியை தவிர்ப்பதற்கு PH உறுதிபூண்டுள்ளது என்கிறார் அன்வார் | Makkal Osai

Next Post
சபா தேர்தலில் மும்முனைப் போட்டியை தவிர்ப்பதற்கு PH உறுதிபூண்டுள்ளது என்கிறார் அன்வார் | Makkal Osai

சபா தேர்தலில் மும்முனைப் போட்டியை தவிர்ப்பதற்கு PH உறுதிபூண்டுள்ளது என்கிறார் அன்வார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin