• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘ஜெயிலர் 2′ நடிகருக்கு அரசு ஆலோசகர் பதவி.. முதல்வர் காட்டிய தாராளம்! யார் இந்த மிதுன் சக்கரவர்த்தி? | Mithun Chakraborty appointed as a West bengal government advisor

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
‘ஜெயிலர் 2′ நடிகருக்கு அரசு ஆலோசகர் பதவி.. முதல்வர் காட்டிய தாராளம்! யார் இந்த மிதுன் சக்கரவர்த்தி? | Mithun Chakraborty appointed as a West bengal government advisor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Nantha Kumar R

Time
Updated: Thursday, October 8, 2026, 0:44 [IST]

கொல்கத்தா: ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை மேற்கு வங்க அரசின் ஆலோசகராக நியமனம் செய்து அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இது கேபினட் அமைச்சருக்கு நிகரான பதவியாகும். இந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி யார்? பதவி கொடுக்கப்பட்டதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

mithun-chakraborty-appointed-as-a-west-bengal-government-advisor

மேற்குவங்கத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுவேந்து அதிகாரி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் பிரபல நடிகராக இருக்கும் மிதுன் சக்கவர்த்திக்கு அம்மாநிலத்தின் அரசு ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மிதுன் சக்கரவர்த்தி மேற்கு வங்க மாநில அரசின் கலாசார ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது சாதரண பதவி அல்ல. இந்த பதவிக்கு கேபினட் அமைச்சருக்கான ரேங்க்கில் வருகிறது.

இந்த பதவியை பெறும் மிதுன் சக்கரவர்த்தி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது 76. இவர் இந்தி, வங்காள மொழிகளில் அதிகமான படங்களை நடித்துள்ளார். வங்காள மொழி திரைத்துறையில் முன்னணி நடிகராக ஜொலித்தார். இதுதவிர கன்னடம், ஒடியா, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.

குறிப்பாக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படித்தல் நடிகர் எஸ்ஜே சூர்யாவிற்கு அப்பாவாக நடித்துள்ளார். அதற்கு முன்பாக நடிகர் ஆதி – நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இவர் திரைப்படத்துறையை போல் அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். முதலில் மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சியில் செயல்பட்டார். அவருக்கு கடந்த 2014ம் ஆண்டில் ராஜ்யசபா பதவியை மம்தா பானர்ஜி வழங்கினார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார்.

2021ல் மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தோற்றதால் மிதுன் சக்கரவர்த்திக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு மிதுன் சக்கரவர்த்தியின் பிரசாரமும் முக்கிய காரணம். இவருக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர்களின் ஓட்டுகளை பாஜகவிற்கு மிதுன் சக்கரவர்த்தி உதவினார்.

இந்நிலையில் தான் மிதுன் சக்கரவர்த்திக்கு மேற்குவங்க மாநில கலாசார துறையின் ஆலோசகராக நிமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கலாசாரத்துறையை முதல்வராக இருக்கும் சுவேந்து அதிகாரி தன்வசம் வைத்துள்ளார். இதன்மூலம் மேற்குவங்க கலாசாரம் சார்ந்த விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை மிதுன் சக்கரவர்த்தி, முதல்வர் சுவேந்து அதிகாரியிடம் வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

West Bengal Chief Minister Suvendu Adhikari has issued an order appointing actor Mithun Chakraborty-who starred in the film ‘Jailer 2′-as an advisor to the state government. This position holds a rank equivalent to that of a Cabinet Minister. Who is Mithun Chakraborty, and what is the background behind this appointment? Let us find out here.

Read More

Previous Post

தொப்பையைக் குறைக்க எளிய வழி: வீட்டிலேயே தயாரிக்க கூடிய இயற்கை பானம்

Next Post

Tech Layoff: ஒரே அறிவிப்பு.. 660 பேரை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்க நிறுவனம்..! | Tech Layoffs 2026: HubSpot Cuts 660 Jobs (7% Workforce) in Major AI Shift; Offers 20 Weeks Severance

Next Post
Tech Layoff: ஒரே அறிவிப்பு.. 660 பேரை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்க நிறுவனம்..! | Tech Layoffs 2026: HubSpot Cuts 660 Jobs (7% Workforce) in Major AI Shift; Offers 20 Weeks Severance

Tech Layoff: ஒரே அறிவிப்பு.. 660 பேரை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்க நிறுவனம்..! | Tech Layoffs 2026: HubSpot Cuts 660 Jobs (7% Workforce) in Major AI Shift; Offers 20 Weeks Severance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin