Last Updated:
ChatGPT, தற்போது நடைபெற்று வரும் பெண்களுக்கான பிரீமியர் லீக் (WPL 2026) தொடரின் ‘பிரீமியர் பார்ட்னராக’ இணைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), தொழில்நுட்ப உலகின் அதிநவீன மாற்றங்களுக்கு ஏற்ப தனது வணிக ஒப்பந்தங்களை விரிவுபடுத்தி வருகிறது.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19-வது ஐபிஎல் (IPL) தொடருக்காக கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) தளமான ‘ஜெமினி’ (Gemini) உடன் பிசிசிஐ புதிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. சுமார் 270 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதாவது 2028 வரை நீடிக்கும்.
ஐபிஎல் தொடரின் சர்வதேச மதிப்பை உலக அளவில் நிலைநிறுத்த இந்தத் தொழில்நுட்பக் கூட்டணி உதவும் என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விளையாட்டுத் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுளுடைய ஜெமினியின் போட்டியாளரான ChatGPT, தற்போது நடைபெற்று வரும் பெண்களுக்கான பிரீமியர் லீக் (WPL 2026) தொடரின் ‘பிரீமியர் பார்ட்னராக’ இணைந்துள்ளது. இதன் மூலம், கிரிக்கெட் மைதானங்களிலும் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு இடையிலான நேரடிப் போட்டி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட கேமிங் தளங்களுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக, இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்த ‘ட்ரீம் 11’ தனது ஒப்பந்தத்திலிருந்து பாதியிலேயே விலகியது.
Jan 20, 2026 10:00 PM IST


