Last Updated:
பில் கேட்ஸ் குறித்து ஜெப்ரி எப்ஸ்டீன் பைல்ஸில் இருக்கும் விஷயம் குறித்து அவரது மனைவி மெலிண்டா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோருக்கு இடையிலான தொடர்பு குறித்த புதிய ஆவணங்கள் வெளியாகிய நிலையில், அது குறித்து அவரது முன்னாள் மனைவி மெலிண்டா பிரெஞ்சு கேட்ஸ் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த உலகின் பல முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் உள்பட சுமார் 30 லட்சம் ஆவணங்களை அண்மையில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
அதில், மின்னஞ்சலில் எப்ஸ்டீன் சேமித்துவைத்திருந்த ஆவணங்களில், பில்கேட்ஸ் ஒரு பாலியல் நோயால் பாதிக்கப்பட்டார் என்றும், அதற்காக மருந்துகளைத் திரட்ட தாம் உதவியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது முன்னாள் மனைவி மெலிண்டா, தனது திருமண வாழ்க்கையில் நடந்த மிக வேதனையான காலங்களை இந்த ஆவணங்கள் நினைவூட்டுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்த பில்கேட்ஸ், எப்ஸ்டீனுடன் தாம் செலவழித்த ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ணி வருந்துவதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளார். உலகளாவிய சுகாதாரப் பணிகளுக்காகப் பெரும் பணக்காரர்களிடமிருந்து நிதி திரட்டுவதற்காகவே எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.


