Last Updated:
பாலியல் குற்றச்சாட்டுகளில் கைதான அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பைனான்சியர் ஜெப்ரி எப்ஸ்டீன், சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் வழக்கில் சில புகைப்படங்கள் மட்டும் மாயமாகி உள்ளதாகவும், யாரையோ டிரம்ப் அரசு பாதுகாப்பதாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுகளில் கைதான அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பைனான்சியர் ஜெப்ரி எப்ஸ்டீன், சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 68 புகைப்படங்களின் தொகுப்பு கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதில், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், ஹாலிவுட் நடிகர் கிறிஸ் டக்கர், இங்கிலாந்து முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
குறிப்பாக, பில் கிளிண்டன் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ஜெட் விமானத்தில் ஒரு பெண்ணைத் தன் மடியில் அமர வைத்துக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தின.
இந்நிலையில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய புகைப்படங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதனால் அனைத்து கோப்புகளையும் வெளியிட வேண்டும் என்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வலியுறுத்தி உள்ளார்.
என்ன நடந்தது என்பதை விவரிக்காமல் புகைப்படங்களை மட்டும் வெளியிடுவது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் கிளிண்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dec 23, 2025 10:08 PM IST
ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் வழக்கில் சில புகைப்படங்கள் மாயம்.. பில் கிளின்டன் தரப்பில் குற்றச்சாட்டு


