இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உச்சத்தை எட்டி வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மக்கள் தங்கத்திற்கு ஈடாக வெள்ளியிலும் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். மேலும், தங்கம், பங்குகள், பத்திரங்கள் போன்ற பல சொத்து வகைகளையும் வெள்ளி விஞ்சியுள்ளது.


