Last Updated:
மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள ஜூலை 9ஆம் தேதி வேலை நிறுத்தம் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்கங்களும் இணைந்துள்ளன.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் வரும் 9ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோதச் சட்டங்கள் உட்பட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக வரும் 9ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்துடன் (AIBEA) இணைந்த வங்காள மாகாண வங்கி ஊழியர் சங்கம், AIBEA, AIBOA மற்றும் BEFI உள்ளிட்ட வங்கித் துறை தொழிற்சங்கங்களும் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு தழுவிய அளவில் நடைபெற இருக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மொத்தமாக 15 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
July 07, 2025 4:37 PM IST
ஜூலை 9ஆம் தேதி ஒன்று கூடப்போகும் 15 கோடி தொழிலாளர்கள்… 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் வேலை நிறுத்தம்