சிங்கப்பூரில் தப்பி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை துரத்தி சென்ற போது LTA அமலாக்க அதிகாரி உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவம் ஜூன் 4-ஆம் தேதி காலை நடந்தது.
ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு லாரிகள் மற்றும் ஒரு வேன் சம்பந்தப்பட்ட விபத்து TPE வெளியேறும் இடத்திற்கு வழியாக BKE நோக்கி SLE இல் நேர்ந்தது.
விபத்தில் சிக்கிய அதிகாரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

