ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 5 சனிக்கிழமைகள் இருக்கின்றன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 17ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஜூன் 18ஆம் தேதியும் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் இயங்காது. ஜூன் 9ஆம் தேதி இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் மகாராணா பிரதாப் ஜெயந்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை என்பதோடு, ஜூன் 10ஆம் தேதி ஸ்ரீகுரு அர்ஜுன் தேவ் ஜியின் தியான தினத்தை ஒட்டி பஞ்சாப் மாநிலத்தில் வங்கிகள் இயங்காது.
ஜூன்14ஆம் தேதி பஹிலி ராஜா காரணமாக ஒடிசாவில் வங்கிகளுக்கு விடுமுறை. ஜூன் 15ஆம் தேதி ராஜ சங்கராந்திக்கு மிசோரம், ஒடிசாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூன் 21ஆம் தேதி வட் சாவித்ரி விரதத்திற்காக பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூன் 8ஆம் தேதி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், ஜூன் 22ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதாலும், அன்றைய நாட்களில் இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மேலும், ஜூன் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும். மேற்குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் இயங்காமல் இருந்தாலும், பொதுமக்கள் வழக்கம்போல, ஆன்லைன் பேங்கிங் மற்றும் ஏடிஎம் மூலம் பணப்பரிவர்த்தனைகளை செய்யலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)