இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் காரணமாக, பயணங்கள் குறைந்ததால், நடப்பு ஜூன் மாதத்தில், டீசலின் தேவை 4 சதவீதம் சரிந்துள்ளதாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக தேர்தல் காலங்களில் அதிகரித்து வரும் எரிபொருள் விற்பனை, இந்த ஆண்டு மாதந்தோறும் தொடர்ந்து குறைந்து வருவதன் மூலம் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், பொதுத்தேர்தல் முடிந்த பிறகும் இந்த சரிவு நிலை நீடித்து வருகிறது. 90% சந்தையை கட்டுப்படுத்தும் அரசுக்கு சொந்தமான மூன்று நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனையானது, ஜூன் மாதத்தின் முதல் பாதியில் 1.42 மில்லியன் டன்களாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 1.41 மில்லியன் டன்னைப் போலவே இருந்தது. இருப்பினும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.6 சதவீதம் குறைந்துள்ளது.
ஜூன் 1 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் டீசல் விற்பனை 3.9 சதவீதம் குறைந்து 3.95 மில்லியன் டன்னாக முந்தைய ஆண்டைவிட குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளது. மேலும், மார்ச் மாதத்தில் 2.7 சதவீதமும், ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதமும் மற்றும் மே மாதத்தில் 1.1 சதவீதம் சரிந்தது. தேர்தல் பிரசாரம், கோடை அறுவடை காலம் மற்றும் கார்களில் ஏ.சி.யின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிக்க:
20 ஆண்டுகளில் 50,000 ரூபாயின் மதிப்பு இதுதானா? ஷாக் கொடுக்கும் பணவீக்க கால்குலேட்டர்!
விகித திருத்தத்தில் ஏறக்குறைய இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு, மார்ச் மாத நடுப்பகுதியில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டன, இந்த விலை குறைப்பு விற்பனையைத் தூண்டியிருக்க வேண்டும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சரிவை சந்தித்துள்ளது. மே 1 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் ஒப்பிடும்போது மாதந்தோறும் பெட்ரோல் விற்பனை 3.6 சதவீதம் குறைந்து 1.47 மில்லியன் டன்னாக இருந்தது. அதே நேரத்தில் மே மாதத்தின் முதல் பாதியில் டீசல் தேவை 3.54 மில்லியன் டன்களாக சீராக இருந்தது.
ஜூன் 1 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில், பெட்ரோல் விற்பனை ஜூன் 2022 இல் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 4.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது, ஆனால் 2020 இன் கோவிட்-பாதிக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது 28.1 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியது. ஜூன் 1 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில், டீசல் விற்பனை ஜூன் 2022இல் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 10.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஆனால் 2020இல் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியது.
இதையும் படிக்க:
UPI பணப்பரிவர்த்தனைக்கான அலெர்ட்… HDFC வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பெட்ரோல் மற்றும் டீசலைப் போலவே, ATF தேவையும் இப்போது கோவிட்க்கு முந்தைய அளவை விட அதிகமாக உள்ளது. ஜூன் 1 முதல் 15, 2024 வரையிலான காலக்கட்டத்தில் ATF விற்பனை 2022ஐ விட 10.1 சதவீதம் அதிகமாக இருந்தது மற்றும் ஜூன் 1 முதல் 15, 2020 உடன் ஒப்பிடும்போது 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூன் 1-15, 2024இல் சமையல் எரிவாயு எல்பிஜி விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 0.1 சதவீதம் அதிகரித்து 1.24 மில்லியன் டன்னாக இருந்தது. இருப்பினும், ஜூன் 1-15, 2022 உடன் ஒப்பிடும்போது எல்பிஜி நுகர்வு 0.9 சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் 2020ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் கணிசமாக 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
