Last Updated:
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா, அர்ஜென்டினாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது.
14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை மற்றும் மதுரையில் தொடங்கியது. 24 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில், லீக் ஆட்டங்கள் நிறைவடைந்து இன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக மூன்றாவது இடத்திற்கான போட்டி நடந்தது. இதில், இந்தியா – அர்ஜென்டினா ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில், 4-2 என்ற கோல்கள் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது.
முதல் மூன்று பாதி வரை 0-2 என்ற கோல்கள் கணக்கில் பின்தங்கியிருந்த இந்தியா, கடைசி பாதியில் நான்கு கோல்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :
December 10, 2025 7:31 PM IST


